உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளில் ஒப்புரிமை

273

“அற்றார்க்கு ஒன்று ஆற்றல்”

(1007) என்றும்,

“அற்றார் அழிபசி தீர்த்தல்”

(226) என்றும்,

“தக்கார்க்கு ஒன்று ஈதல்”

(1006) என்றும்

“தக்கார்க்கு வேளாண்மை செய்தல்”

(212)

என்றும் கூறுவார். (42)

அற்றாரையும் வறியரையும் 'துவ்வாதார்' என்றும் கூறுவார்.

இவ்வகையில் ‘அற்றார்'க்கு என்றும், 'தக்கார்’க்கு என்றும் ஈகைக்கு உரியாரை இனம் காட்டிய ஏந்தல் வள்ளுவராகிறார்.

அற்றார், தக்கார் என்பவற்றில் இல்லாமையும் தகுதியும் உள்ளனவே ஒழிய இன்ன சமயத்தார், இன்ன சாதியார், இன்ன பிரிவார், இன்ன கொள்கையார் என்னும் வேறுபாடு இல்லாமை அறிந்து கொள்ளத்தகும்.

ஊருணி நீரும், பழமரமும், மருந்து மரமும் வேண்டுவார்க்கு வழங்கும் ஒப்புரவுப் பொருளாதல் போல் பேரறிவாளர், பெருந்தகையர் செல்வமும் பொதுமை நிலையில் உலகுக்குப் பயன்படுவதாக இருக்க வேண்டும் என்றும் தெளிவு படுத்துகிறார்.

பெற்றோரைப் பேணல், சுற்றம் பேணல் கட்டாயத் தேவை.

துறவர், விருந்தர், அறிவர் ஆகியோரைப் போற்றலும் தேவை. இவரும் பொதுப் பார்வையில் போற்றத் தக்கவரே யன்றிப் பிரிவுப் பார்வையில் பார்த்துப் பேணத் தக்கவர் அல்லர் என்பது வள்ளுவம்,

உறுப்புக் குறையர் உதவி பெறுதற்கு உரியர்; அவர்க்கு உதவுதல் பேறு என்றொரு கருத்து நாட்டில் உலாவியது அது.

66

'காணார் கேளார் கால்முடப் பட்டோர்

பேணுநர் இல்லோர் பிணிநடுக் குற்றோர்

யாவரும் வருக

""

(13 - 111-113)

என்று மணிமேகலையார் அமுதுண்ண வருவாரை அழைத்த அழைப்பால் புலப்படும்.

66

"ஆற்றுநர் களிப்போர் அறவிலை பகர்வோர்

ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர் மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை'

என்று அதே மணிமேகலை கூறியதும்,

(11 92 94)