உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

“அறவிலை வாணிகன் ஆஅய் அலன்"

என்ற புறநானூறு கூறியதும் நினைவிற் கொள்ளத்தக்கன.

உறுப்புக் குறையரும் பிறர்க்கு ஒப்பவும், உயரவும் கல்வி, செல்வம் வினைத்திறம் ஆகியவற்றில் விளங்குதலைக் கண்ட வள்ளுவ உள்ளம் அவர்க்கு உதவுதலைக் குறிக்கோளாக்கிற்று இல்லை. அவருள்அற்றாரும் தக்காரும் உளரேல் அவர் விலக்கற்கு உரியர் அல்லர் என்பதும் பொதுப்பார்வையே.

உறுப்புக்குறையரை, முன்னைப் பிறப்புகளில் பாவம் செய்தோர் என்று பழித்தலும் ஒதுக்கியும் வைக்கும் போக்கு தமிழர் நெஞ்சில் நஞ்சாகப் புகுத்தப்பட்டதும் உண்டு.

"நொண்டி, ஒருகண் பொட்டையன், வேலைக்காரனான தாழ்குலத்தோன், விரல் குறைந்தும் மிகுந்தும் உள்ளவர் வர்கள் சிரார்த்த நாளில் வீட்டை விட்டு வெளியேற்றத் தக்கவர், என்கிறது மநு தருமம் (32-4).

அந்நிலையில்,

“பொறியின்மை யார்க்கும் பழியன்று; அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி”

என்று வள்ளுவம் முழங்கியது.

சங்க நாளிலே,

"கொடைமடம்" என்பதோர் பெருமை பேசப்பட்டது. ஆராயாது கொடுத்தாலே கொடை மடமாம்.

உடுத்தாது போர்த்தாது ஆயினும் மயிலுக்குப் போர்வை தந்தான் பேகன். ஆடி அசைந்த முல்லைக்கு ஆடும் மணித் தேரை நல்கினான் பாரி. இவையன்னவை கொடைமடம். இக்கொடை மடத்தையும் வள்ளுவம் போற்றவில்லை!

உள்ள அளவை அறிந்து, தேவை அளவை அறிந்து ஈக என்பதே அவருரை!

உள்ளவற்றை யெல்லாம் இழந்தும் உதவும் பான்மையர் உளர் அத்தகையர் அரியர். அவரை எண்ணிப் பிறரும் நடையிடுதல் ஆகாது என்பாராய்.

“உளவரை தூக்காத ஒப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும்”