உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளில் ஒப்புரிமை

275

என்கிறார். இதன் பொருள், “உள்ள பொருள் அளவை ஆராயாமல் கொடுக்கும் கொடையால் பொருள் மலைபோல் இருப்பினும் அது விரைவில் இல்லாமல் ஒழியும்” என்பதாம்.

அற்றார்க்கு ஈதல் அவர் வாழ்வுக்கு!

தக்கார்க்கு ஈதல் உலகநலத்திற்கு!

விடுதலை வேட்கையர் சுப்பிரமணிய சிவா திரு.வி.க.வினிடம் 10 உரூபா கேட்டார். அதனை வழங்கிய திரு.வி.க. நெகிழ்வுற்றார். சிவா போனபின், "இந்த பத்து உரூபாவில் 9 3/4 உரூபா நாட்டுத் தொண்டுக்குச் செலவிடுவார். நாலணா இவர் வயிற்றுக்கு. இவரையும் இத்தொகைக்குக் கையேந்த வைத்திருக்கிறதே இந்நாடு! இந்நாட்டுக்கு உய்வு உண்டோ?” என்று வெதும்பினார். இது தக்கார்க்கு ஈதல்!

இதோ பாருங்கள் இன்னொரு கொடையை!

தஞ்சை அரசர் பாபநாசத்திற்குச் சென்றார். அன்று ஏகாதசி என்பதை மறந்து உணவு கொண்டதுடன், இலைபாக்கும் மென்றார். அதன்பின் ஏகாதசி நினைவு வந்தது. அதற்குக் கழுவாய் என்ன என்று கேட்டார். “ஓர் அக்கிரகாரப் பிரதிஷ்டை செய்து வீடுகள் கட்டி வேதவித்துக்களாகிய அந்தணர்களுக்கு அவ்வீடுகளோடு பூமியையும் தானம் செய்தால் இந்தத் தோஷம் நீங்கும்" என்றார்கள்.

"இதுதானா பிரமாதம்? அப்படியே செய்துவிடுவோம். தே இடத்தில் பிரதிஷ்டை செய்வோம்" என்றார் அரசர்.

48 வீடுகள் கட்டினார்; இரண்டு வீடுகளுக்கு ஒரு கிணறு வெட்டினார். 48 பிராமணர்களை அழைத்து ஒவ்வொரு வீடு வழங்கினார். ஒவ்வொருவருக்கும் 12மா நன்செயும், அதற்கு ஏற்ற புன்செயுமாகக் கொடை புரிந்தார். அது உத்தமமான தானப் பொருளாக அமைந்தமையால் 'உத்தமதானபுரம்' என்னும் பெயரால் வழங்கப்பட்டது. இது தென்மொழிக் கலைஞர் உ. வே. சாமிநாதர் தாம் எழுதிய தம் வரலாற்றின் தம்மூர்ப் பெயர் பற்றிய செய்தி!

தானத்தில் உத்தம தானம், மகாதானம் என்பனவெல்லாம் எப்படி இடம் பெற்றன! இப்படி எத்தனை ஊர்கள்? நான்கு வேதங்களைக் கற்றோர்க்கென வழங்கப்பட்டவை 'சதுர்வேதி மங்கலங்கள்! இப்பெயரால் எத்தனை ஊர்கள். அகரம் என்பது என்ன? அக்கிராகரம் என்பது என்ன? எல்லாம் கொடைகள்?