உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

66

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

“அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயினென்?'

என்று திருமூலர் விலக்கியும் விளக்கியும் பயன்படவில்லை!

அவரெல்லாம் ‘தக்கார்’ எனினும், ஒரு சாதியக் கொடை தானே! முப்பாற் கொடை என எங்கேனும் மூவேந்தர் காலந் தொட்டுக் கேட்டதுண்டா? தேவாரக் கொடை திருவாசகக் கொடை திருவாய் பொழிக் கொடை என்பன போல நிகழ்ந்தனவா? ஈகையினும் சாதிமைக் கொடுமையா?

மொழிவகை ஈகையிலும் கண்மூடிக் கொடுமையா?

"பதினாயிரம் பிராமணர்களுக்கு அன்னதானம் செய்ய எண்ணி இருக்கிறேன். அதற்கு மகாராஜா உதவி செய்ய வேண்டும்' என்று ஒருவர் அரசரை வேண்டினார். அரசர் உதவினார். உதவி பெற்றவர் இரண்டே இரண்டு பேர்க்கே உணவளித்தார். அடுத்த வீட்டுக்காரர் இருவர்க்குத்தானே சோறு போட்டீர் என்று கேட்க அவர் இருவரா பதினோராயிரம் பேர்க்குச் சோறு போட்டேன் என்றார். ஒருவர் எண்ணாயிரத்தார் (அஷ்ட சகஸ்ரர்) ஒருவர் மூவாயிரத்தார் (தீக்ஷிதர்); ஆகப் பதினோராயிரர் ஆதலால், அரசரிடம் சொல்லியதற்கு மேலே ஆயிரவர்க்கு உணவு வழங்கினேன்" என்றாராம். இதனைக் கூறும் சாமிநாதர் து உண்மையோ பொய்யோ என்கிறார்!

பொய்யே ஆக! மெய்யே ஆக! எப்படியெல்லாம் கொடை மடவர் இந்நாட்டில் இருந்தனர் என்றும், பேணத் தக்காரை ஏறிட்டுப் பாராமல் ஒதுக்கினார் என்றும் கூறும் சான்றுகள் அல்லவோ இத்தகையவை!

இதே மண்ணில்தான் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஒப்புரவு ஈகையை வலியுறுத்தி "ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்" என்று முழங்கிய முப்பால் வள்ளலும் திகழ்ந்தார் என்று நினைத்து அவர் வழிப்பட வேண்டியதாகின்றது.