உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. அச்ச ஒப்பு

அச்சம் என்பது மடமையடா

அஞ்சாமை திராவிடர் உடமையடா!

என்பது தமிழர் செவிக் கெல்லாம் நிறைந்த பாட்டு.

66

“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!

உச்சி மீதில் வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”

என்பது பாரதியார் பாட்டு.

“அச்சம் உள்ளடக்கி அறிவகத் தில்லாக் கொச்சை மாக்களைப் பெறுதலின் அக்குடி எச்ச மற்றேமாந் திருக்கை நன்றே'

என்பது வெற்றிவேற்கை வீரராமன் பாட்டு.

இன்னவை எல்லாம் அஞ்சாமையை எடுத்துரைக்கும்

பாடல்கள்.

அச்சம் என்பது மகளிர்க்கு வேண்டிய நற்குணங்களுள் ஒன்று அல்லது இயல்பான குணங்களுள் ஒன்று என்னும் கருத்து பண்டு தொட்டே தமிழ் மண்ணில் ஊன்றியுள்ளது.

"ஏண்பால் ஓவா நாண்மடம் அச்சம் இவையேதாம் பூண்பா லாகக் கொள்வார் நல்லார் புகழ்பேணி”

என்பது கம்பர் வாக்கு.

புகல்வு.

நாற்குணமும் நாற்படையா" என்பது புகழேந்தியார்

"அச்சமும் நாணும் மடனும் முந் துறுத்த

நித்தமும் பெண்பாற் குரிய வென்ப”

என்றார் தொல்காப்பியனார் (களவு.8) ஆடவர் இயல்பெனப்

“பெருமையும் உரனும் ஆடூஉ மேன”