உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

என்றார் அதே இடத்தில் தொல்காப்பியர் கூறினார் (களவு. 7)

இவற்றை நோக்க அச்சம் ஆடவர்க்கு ஆகாது என்பதும், அச்சம் பெண்ணுக்குப் பெருமை சேர்ப்பது என்பதும் ஆகிய இருகருத்துக்கள் தமிழ் மண்ணில் பரவலாகக் கொள்ளப் பட்டிருந்தன என்பது புலப்படும். அஞ்சாமை என்பது ஆடவர்க்கே உரிமையுற்றது என்பது போலவும் கருத்து இருந்தமையும் புலப்படுகின்றது.

ஆனால், திருவள்ளுவர் அச்சத்தை ஆண்பால் பெண்பால் என்னும் பால்வகைப் பொருளாகக் கொண்டார் அல்லர் என்பதும், இருபாலினரும் அஞ்சவேண்டும் நிலையும் வேண்டும்; அஞ்சா நிலையும் வேண்டும்; அவ்விரு நிலைகளும், இருபாற்கும் பொதுவாகவும் விளங்கவேண்டும் என்று தேர்ந்து தெளிந்து தீர்மானிக்கிறார்.

6

அவை அஞ்சாமை' என்பதோர் அதிகாரம் (73) 'இரவு அச்சம்' என்பதோர் அதிகாரம் (107) ‘தீவினை அச்சம்' என்பதோர் அதிகாரம் (21) இவ், அதிகாரங்கள் அஞ்சாமையும் அஞ்சுதலும் பற்றியவை. படைச்செருக்கும் படைமாட்சியும் (78, 77) அஞ்சா நிலையவை. வெருவந்த செய்யாமை (57) என்பது அஞ்சச் செய்யாமை தழுவியது. இவை மாந்த இனத்துப் பொதுமை சுட்டுவனவே அன்றிப் பிரித்துப் பேசுவன அல்லவாம்.

'அஞ்சாமை அல்லால் துணை வேண்டா" என்று அதுவே துணை என அறுதியிட்டவர் திருவள்ளுவர் (497). நிலன் ஆள்பவர்க்கு அஞ்சாமை வேண்டும் என்பதை “அஞ்சாமை ஈகை துணிவு ஊக்கம்" என எண்ணுவார் (382).

அச்சத்திற்கு விளக்கம் தருவார் போல் 'உயிரச்சம்' என்றும் கூறுவார் (501). அச்சம் உடையவர்க்கு அரணாவது எதுவும் இல்லை என அறுதியிடுவார் (534). 'அச்சம்' என்பது இழிநிலையர் யல்வு; அவரை அச்சுறுத்தியே ஒழுங்குபடுத்த வேண்டும் என்று உரைப்பார் (1075).

உடற்பசியைத் தீர்ப்பதற்காக அஞ்சிக் கிடக்கும் இயல்பு ஆண்மையற்றது. பெருமையற்றது என விரித்துரைப்பார் (அதி. 91) அவையஞ்சல், படையஞ்சுதலினும் இழிவு என்று உரைப்பார். அவைக்கண் அஞ்சாமை வேண்டும் என்று விரிந்துரைப்பார் (அதி. 73). அறத்திற்கு மாறான செயற்பாட்டில் அஞ்சுதல்