உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளில் ஒப்புரிமை

279

வேண்டும் எனத் தொகுத்துரைப்பார் (366). படைப்பகையினும் நட்புப் பகையே அஞ்ச வேண்டுவது என்று விழிப்புறுத்துவார் (882). வஞ்சர்க்கு அஞ்சுக என்றும் கூறுவார் (824). இழிவென்னும் ஏதத்திற்கு அஞ்சுக என்றும் கூறுவார் (464). அஞ்ச வேண்டுவது அஞ்ச வேண்டாதது என்பவற்றை இணைத்துக் கூறவும் தவற வில்லை. தீயவை செய்வதற்கு நல்லோர் அஞ்சுவர் என்றும் அல்லோர் அஞ்சார் என்றும் (201) கூறுவார்; அது:

"தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு.

என்பது.

இனி ஒட்டுமொத்தமாக,

“அஞ்சுவது அஞ்சாமை பேதைமை; அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்”

வள்ளுவர் வழங்கிய இக்கருத்து,

"பிறர், அஞ்சுவதஞ்சிப்

புகழெனின் உயிரும் கொடுக்குவர்"

என்பார் (428)

எனப் புறப்பாடலில் போற்றி உரைக்கப்படும். அஞ்சுவதற்கு அஞ்சலும், உயிரும் கொடுக்கும் அஞ்சாமையும் ஒருங்கிணைந்தது இது (புறநா.182). இதனை, "அறிவ தறிந்தடங்கி அஞ்சுவது அஞ்சி" என்று போற்றும் நாலடி (74).

திருவள்ளுவர் கருத்துப் புரட்சிகளுள் ஒன்றாகிய இது, பால் பொதுமைப் பொருளாக விளங்குதலையும், இரு பாலினரும் அஞ்ச வேண்டுவனவும் உண்டு, அஞ்ச வேண்டாதனவும் உண்டு என்றும் தெளிவித்ததை அறிக.