உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. நாண ஒப்பு

மகளிரின் நான்கு குணங்களுள் ஒன்று ‘நாணம்' எனத் தொல்காப்பியனார் தொடங்கிப்

தொடர்ந்து கூறியுள்ளனர்.

“அச்சமும் நாணமும்... பெண்பாற் குரிய”

புலமையார்

என்று அவர் கூறியுள்ளதை அச்ச ஒப்பில் அறிந்தோம். "ஏண்பால் ஓவா நாண் மடம் அச்சம்”

என்று கம்பர் எண்ணியதையும் சுட்டினோம்.

பலரும்

அச்சம் போலவே நாணமும் இருபாலுக்கும் பொதுமை யானதே என்பதை வள்ளுவம் வலியுறுத்துகிறது.

நாணப் பண்பு என்பது இருபாற் பொது என்பதைக் கூறும் வள்ளுவம் இந்நாணம் அன்றி மகளிர்க்கே உரிய நாணம் என்பதொன்றும் உண்டு என்பதையும் சுட்டுகிறது. அது "திருநுதல் நல்லவர் நாணு” என்று சொல்லப்படுகிறது (1011) இனிப்பொது நாணும் அக்குறளிலேயே சுட்டவும் படுகிறது. அது “கருமத்தால் நாணுதல் நாணு" என்பது.

66

து

“யாம், நாணம் என்று இவ்வதிகாரத்தில் - நாணுடைமை சுட்டுவது கருமத்தால் நாணும் நாணுதலேயாம்" என்கிறார்.

கருமத்தால் நாணுதல் என்பது என்ன?

கடமையைப் பிழையாகவும் தவறாகவும், இழிவும் பழியும் உண்டாமாறும் செய்தலும், அதனைச் சுட்டிக் காட்டும்போதும் தவற்றை உணர்ந்து தலை தாழாது தலைநிமிர்ந்தும், வாய்தடித்தும், நெஞ்சம் விம்மியும் நிற்கும் ஆணவ நிலையும் கருமத்தால் நாணாமையாம். தவற்றைச் சுட்டிக்காட்டிய உடன் உணர்ந்து தலை தாழ்ந்து நிற்றல் கருமத்தால் நாணுதலாம்.

'நீ சோழன் மகன் அல்ல, என்று ஒரு புலவன் சோழன் மகனைச் சுட்டியவுடன் அவன் தாழ்ந்தான்.