உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளில் ஒப்புரிமை

281

சுட்டிய புலவன் தாமப்பல் கண்ணன் என்பவன். அவன் தான் தவறு செய்திருந்தும், சோழன் மகன் தவறு செய்யானாக இருக்கவும், சுட்டிய அளவில் பெற்றோர்க்குப் பழியாயிற்றே என்று குற்றம் செய்தான் போல நாணினான் எனக் குறிப்பிடு கின்றான் புலவன்.

காரியின் மக்களை யானையின் காலின் கீழ்ப்பட்டு மிதிப்புற ஏவும் போது 'இவர்கள் கொடையாளன் காரியின் மக்கள்; வரும்யானை கொல்லும் என்பதுணராது மணியொலியும் தோற்றமும் கண்டு வியப்புறும் சிறுவர்; கொல்லத்துணிந்த நீயோ செம்பியனாம் (சிபி) சோழன் வழிவந்தவன். நான் கூறுவதைக் கூறினேன்; நீ விரும்பிய வண்ணம் செய்” என்ற புலவர் உரை கேட்டதும் சிறுவர்கள் உயிருய்ந்து போக விடுத்தான் சோழன் கிள்ளிவளவன் என்னும் வரலாறு, கருமத்தால் நாணிய நாணத்தின் விளைவாகும்?

இன்று ஒருவர் தவற்றைச் சுட்டினால் அந்த நாணுதலைக் காண முடிகிறதா? தலைவர் ஒருவர் தவற்றைச் சுட்டினால், அவர் அத்தவற்றைச் செய்யவில்லையா' என எதிர்வினா விடுவாரிடம் நாண நாகரிகத்தைக் காண முடியுமா? வேடிக்கையும் வீணமும் கொண்டார்க்கு இவ்விழுமிய நாணப் பண்பு எப்படி உண்டாம்?

உயிர்களுக்கெல்லாம் ஊணும் உடற்காப்பும் பிறவும் பொதுவானவையே. ஆனால் நாணம் என்பது மாந்தர்க்கே உரிய சிறப்புத் தன்மையாம். திருடும் நாயைத் திட்டினாலும் அடித்தாலும் நாணவோ செய்யும்? அந்நிலையில் மாந்தனும் இருந்தால் அவனுக்கும் அதற்கும் என்ன வேறுபாடு? களவுடம் பட்டுக் கவிழ்ந்து நிலங்கிளைத்தலைக் காட்டும் கலித்தொகை. 'நாணுடைமையே சால்பு'; 'நாணுடைமையே அணிகலம்; 'நாணமில்லா நடையிடல் மரப் பாய்ச்சி அசைந்தாடல், (1020) என்றெல்லாம் வள்ளுவம் பேசுகின்றது.

“பிறர் நாணத் தக்கது தான்நாணான் ஆயின் அறம் நாணத் தக்க துடைத்து”

என்றும் கூறுகிறது.

99

பெற்றோர்க்கும் உற்றார் உறவுக்கும் தொடர்புடை யார்க்கும் நாணத்தக்கது என்று தோன்றுவதைச் செய்த ஒருவன் அதற்கு நாணவில்லை என்றால் அவன் இழிமை நோக்கி அறமே நாணமுறுமாம்!