உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

இளங்குமரனார் தமிழ்வளம்

40 ஓ

நாண அறத்தைக் கொள்ளா இழிஞனை நோக்கியும், நாணாமையை அறமென அவர் கொண்டதை நோக்கியும் அறமே நாணுகின்ற தாம்!

சால்பு என்பது பண்பின் விரிவும் நிறைவுமாய், அச்சால்பு மாளிகை ஐந்து தூண்களைக் கொண்டுளதாம். அத்தூண்கள் அன்பு, நாண்,ஒப்புரவு கண்ணோட்டம், வாய்மை என்பனவாம்.

உலகந் தாங்கும் உயர் மாளிகையை அல்லவோ படைத்து மொழிகிறார் பொய்யாமொழியார் (983)

தீமை செய்தார்க்குத் தக்க தண்டனையாவது அவர் நாணிக்கவிழுமாறு நன்மை செய்வதே என்னும் வள்ளுவம் எத்தகைய ஏற்றமிக்கது? (314)

‘பழிக்கு நாணுதல் இல்லாதவைத் தக்கார் எனத் தேர்ந்து கொள்ளல் ஆகாது' எனத் தடுத்தாட் கொள்ளுகிறது வள்ளுவம்

(506).

பேதை என்பதை வெளிப்படக் காட்டும் எடுத்துக் காட்டாவது நாணம் இல்லாமை என்கிறது வாய்மொழி (833).

ஒருவரை உரிமை அன்பால் தெரிந்து தேர்ந்து கொள்ள வேண்டுமானால் குற்றத்திற்காக வருந்தும் நாணமுடையாராக அவர் இருத்தல் வேண்டும் என இயம்புகிறது ஒளிநூல் (502).

நடுவுநிலை தவறுதற்கு நாணமுறுவார் பெரும் பொருளை விரும்பிப் பெரும்பழி தேடிக் கொள்ளார் என்கிறது நயன்மை நூல் (172).

"பழிநாணும் பிறப்புப் பளிச்செனக் காட்டுவது ஒன்றுண்டு; அது சின்னஞ்சிறு பழிக்கும் பென்னம் பெருநாணங் கொள்வது” எனப் புகழ்கிறது புகழ்நூல் (483)

"தேடிப் போயும் நாடியலைந்தும் கோடிதந்தும் கொள்ள வேண்டிய நட்பு, நாணப் பண்பில் தலைநிற்பார் நட்பே” என்கிறது நம்மறை (794).

கருமத்தால் நாணும் இத்தகு நாணுதல்களை அடுக்கும் வாழ்வியல் நூல் 'திருநுதல் நல்லார் நாணு' தலையும் நவில்கின்றது.

முன்னது இருபால் பொதுமை; அவ்வாறே அறத்துப்பால் பொருட்பால் ஆகிய இருபால்களிலும் இயம்பப்படுவது. இன்பத்துப்பாலில் இடம் பெறுவது 'திருநுதல் நல்லவர் நாணு'