உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளில் ஒப்புரிமை

"பிணைஏர் மடநோக்கும் நாணும்” உடைமையும் அவள் நோக்குங்கால் அவள் நிலன் நோக்குதலும்

283

(1089)

(1094)

ஆகிய நாணத்தை முகப்பாகக்கொண்டு இன்பத்துப்பால் நடையிடுகிறது. இருவர்தம் நாணும் நீங்கியமை நாணுத் துறவுரைத்தலாம். அவன் தன் நல்லாண்மையும் நாணும் இழந்தமை நவில்வது நாணுத் துறவுரைத்தல். (அதி. 114) அடுத்தே அலருரைக்கு நாணுதல் உண்டு (1149) தன் துயர்ப் பெருக்கைத் தலைவர்க்கு உரைத்தல் நாணாதல் தொடரும் (162). "காமம் விடு அல்லது நாண்விடு" என்று கடியும் தலைவி நெஞ்சு (1247). நிறை என்னும் கதவின், தாழ் நாண் என்பது விளக்கமுறும்; நாண் அழிதலும் நவிலப்படும் (1251, 1257) நாணும் மறந்தமை (1297) நாட்டப்படும். இவையெல்லாம் இன்ப இயல் நாண்கள்.

இவற்றால் நாண் என்பதை இன்ப நாண், துன்ப நாண் என இரண்டாகப் பகுத்தலும் ஆண் பெண் ஆகிய இருபாலார்க்கும் துன்ப நாண் பொதுவாக இருத்தலும், திருநுதலார் நாண் என்பதும் அவர்க்கே அன்றி அவனுக்கும் உண்டு என்பதும் வள்ளுவப் பொதுமையாதல் உணரத்தக்கதாம்!