உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

'இயற்றுதல்' என்பது உலகு படைத்தலைக் குறிக்குமா? இயற்றுதல் படைத்தல் பொருளில் வேறு எங்கே இடம் பெற்றுள்ளது? உளதாக்கல், உண்டாக்கல், படைத்தல் என்பனவே உலகொடும் தொடரும் மரபாட்சிகள். நூல் இயற்றுதல் என்பதே, சட்டம் இயற்றுதல் வினைமரபு ஆகலின், படைத்தான் மேல் ஏற்றப்பட்ட பழியென்க ஆட்சியாளனொடு சார்த்தி அறங் கூறுதலே வள்ளுவ நோக்காம்;

“கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி”

என்பதிலுள்ள குடியோம்பல் இறைமாட்சி நிறைநிலையாதல் தெளிக (390). இவ்விறை, ஆள்பவன் அல்லனோ?

“என்னிழல் வாழ்நர் சென்னிழர் காணாது கொடியனெம் இறையெனக் கண்ணீர் பரப்பிக் குடிபழி தூற்றும் கோலேன் ஆக”

என்னும் வஞ்சினப்பாட்டு ஆள்வோன் ஒருவன் தன் ஆண் கடனாகச் சுட்டிய பாட்டேயன்றோ!

-

இவற்றால் முத்திருமேனிக் கொள்கையும், முத்தொழிற் கொள்கையும் வள்ளுவம் சாராதவை என்பதும் தெளிவாகும். இனி, வகுத்தான் வகுத்த வகை என்பதும், வேந்தனையே சார்தல் 'இயற்றலும்' என்னும் குறள் வழியே தெளிவாவதாம்.

இறை நிலைகளுள் குருவன் நிலை:

திருக்குறளுக்கு உரைகாணத் தொடங்கும் திரு.வி.க ஏட்டினின்றும் இயற்கையிடமும், அதன் உள்ளுறையான இறையினிடமும் செல்லுதல் வேண்டும். இஃதொருவித ஒழுங்கு முறை என்கிறார். (பக். 10)

-

"மனமுடைய மக்கள் வாக்குடைய மக்கள் - எல்லாவற் றையும் கடந்து நிற்கும் ஒன்றை எப்படி நினைத்தல் கூடும்? எப்படி வாழ்த்தல் கூடும்? என வினாவி, இயற்கையின் இறை நீக்கமறக் கலந்துள்ள நுட்பம் இயற்கை வழி பாட்டாலேயே சிலர்க்கு இயல்பாக விளங்கும். பலர்க்கு அஃது அவ்வழிபாட்டால் விளங்குவதில்லை. இப்பலர்க்குக் குருநாதன் அருள் தேவை. கடவுள் குருநாதன் உள்ளத்தையும் கோயிலாகக் கொண்டு உயிர்கட்கு அருள் செய்தலால் கடவுள் நிலைகளுள் குருநாதன் நிலையும் ஒன்றாகும் என்கிறார்". (பக். 24)