உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளில் ஒப்புரிமை

287

மேலும், "ஆதிபகவன் 'ஞானகுரு' என்னும் பொருளில் நிற்கும் போது, அவனது குருநிலை விளங்குவதாகிறது. இது வழிபாட்டுக்கு எளியது” (பக். 41), குருநாதன் வாயிலாகக் கடவுள் அறிவுறுத்திய ஒழுக்க நெறியில் நின்றவர் நீண்டகாலம் வாழ்வர் (பக்.60).

ஐந்தவித்தான் எவன்? இறைவன் என்று சிலர் கூறுப. இறைவனுக்கு ஐந்து (புலன்) உண்டா?

புலனே இல்லா ஒருவனைப் புலனை அவித்தவன் என்று எப்படிச் சொல்வது?

ஐந்தவித்தானை எல்லாங்கடந்த இறைவன் என்று சொல்லுதல்

பொருந்தாது.

ஐந்தில் இருந்து ஐந்தவித்தவன் குருநாதன், குருநாதன் உடலைக் கோயில் கொண்டு கடனாற்றுவதும் கடவுள் நிலைகளுள் ஒன்றாதலான் ஆசிரியர் ஐந்தவித்தானைக் (குருநாதனை) கடவுள் வாழ்த்தில் வைத்து ஓதினார் என்க.

குருநாதன் மனிதனா? ஆண்டவன் குருநாதன் மனிதக் கோலம் உடையவன். அவன் முகத்தில் வீற்றிருப்பவன் ஆண்டவன் குருநாதன் தனக்கென ஒன்றில்லாதவன். கடவுளே விளங்கும் உள்ளமுடையவன். கடவுள் இயக்க இயங்குவோன். மனமிலாக் கடவுள் குருநாதன் வழி நினைப்பவனாகிறான்; மொழியில்லாக் கடவுள், குருநாதன் வழிப் பேசுவோனாகிறான்; மெய்யிலாக் கடவுள், குருநாதன் வழிச் செயல் புரிவோனாகிறான். (பக். 64)

-

"தமிழ் உலகில் நுழைந்த கதை நூல்கள் பலவும் போலித் துறவுகள் பலவும் - நாட்டின் அகக் கண்ணைத் தூர்ந்து விட்டன. அதனால் புறக்கண்ணொளியும் மழுங்லாயிற்று." (பக். 133) என்று கூறுவனவற்றை இவண் நோக்குதல் ஆய்வுத் துணையாம். தாள்சேர்தல் - பொருள்

இறைவணக்கப் பாடல்கள் பத்தனுள் தாள் சேர்தல், தாள் தொழல், தாளை வணங்கல், அடிசேர்தல் எனத் தாளும் அடியுமாய் ஏழு இடங்களில் ஆள்கிறார். ஆதலால் உருவ வணக்கத்தை உளங்கொண்டு சொல்கிறாரோ என எண்ண வேண்டுவதில்லை. தாள் சேர்தல் முதலியவை தாளை அடைதல், பற்றிக் கிடத்தல், மன்றாடுதல் என்னும் பொருள் படுவன அல்ல என்பாராய்த் திருவள்ளுவரே, 'பொருள் சேர் புகழ் புரிதல்' என்றும், 'பொய்தீர் ஒழுக்க நெறி நிற்றல்' என்றும் கூறுகிறார்.