உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடி,

11. ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்!

ஒருமைப்பாடு!

எத்தகைய பெருமைப் பாடான செய்தி!

வானொலி முழக்காத நாள் உண்டா? தொலைக்காட்சி துலங்காத நாள் உண்டா? தலைவர்கள் பொழியாத நாள் உண்டா?

இவை எல்லாம் என்ன ஆயின? ஆகின்றன?

கடலில் கரைத்த காயமா?

காற்றில் பறத்திய பஞ்சா?

"வெள்ளிப் பனி மலையின் மீது உலாவுவோம்!

மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்!"

இனிமைதான்!

“சிந்து நதியின்மீசை நிலவினிலே

சேரநன் னாட்டிளம் பெண்களுடனே

சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்தே

தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்”

இனிமைக்கு இனிமைதான்!

“இமயத்தில் ஒருவனுக்குத் தலைவலித்தால்

குமரியில் இருந்து ஒருவன் மருந்து கொண்டு வருவான்!

குமரியில் ஒருவன் தடுக்கி விழுந்தால்

இமயத்தில் இருந்து ஒருவன் தூக்கி நிறுத்துவான்!

நல்ல நல்ல உருக்கங்கள் தாம்!