உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

இளங்குமரனார் தமிழ்வளம்

-

40

இவற்றை நடைமுறையில் காண்கிறோமா?

வானொலி இயக்கங்களிலேயே எத்தனை ஒருமைப்

பாட்டுக் கேடுகள்?

தொலைக்காட்சி

ஒருமைப்பாட்டுக் கேடுகள்?

இயக்கங்களிலேயே

எத்தனை

ஆட்சியின் உச்சி முதல் உள்ளங்கால் நிலைவரை எத்தனை ஒருமைப்பாட்டுக் கேடுகள்?

கட்சிகளிலே, உட்கட்சிகளிலே எத்தனை எத்தனை ஒருமைப்பாட்டுக் கேடுகள்?

போட்டால்

ஒருமைப்பாடு

முளைக்கும்

புடலையா பூசுணையா

ஊன்றினால் வளரும் வெங்காயமா கரும்பா ஒருமைப்பாடு? இவை முளைக்கவும் வளரவும் கூட எத்தனையோ சூழல்கள் பொருந்த வேண்டுமே!

வாந்தி எடுக்கும் வாய்முழக்கத்தால் ஒருமைப்பாடு வரவே

வராது!

ஏன், வாய்கிழியும் ஒழிய வரவே வராது ஒருமைப்பாடு! ஒருமைப்பாடு உண்மையில் எழுவது!

ஒருமைப்பாடு உணர்வில் வளர்வது!

ஒருமைப்பாடு உயிரில் பொலிவது! ஒருமைப்பாடு இறைமை வெளிப்பாடு!

என் உடல் இயக்கத்தில் ஒருமைப்பாடு

இல்லையா, அது நோய்!

அதனைக் கருதிக் கருதிக் கருத்தாகத் தீர்க்க வில்லையா? முற்றிய நோய் புற்றுநோய்!

அறிவாளன் ஊதுகா மாலையைக் கண்டு,

‘அழகு அழகு' எனப் பாராட்டமாட்டான்!

அழிவுக்கு அறிகுறி எனக் காண்பான்!

போலி முழக்கத்தால் பொலிவு உண்டாகாது!

பூச்சு மருந்தால் புரையோடிப் போன உள்நோய் தீர்ந்துவிடாது!

கண்கவரும் காட்சிகளால், காலமெல்லாம் ஏமாற்றி விடமுடியாது!