உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளில் ஒப்புரிமை

293

மண்ணின் நடுக்கம் (நிலநடுக்கம்) ஒட்டு மொத்த அழிவு

செய்யாது!

விண்ணின் இடிக்கும் விடிவு உண்டு!

ஆழிப்பேரலை அழிவுக்கும் தப்பலாம்! ஆனால், மக்கள்

கிளர்ந்தால்?

செம்மறியாடெனச் சாயும் மக்களும், விழிப்புற்று வீறிட்ட வரலாறு உண்டு!

-

மக்களாம் வெள்ளம் கிளர்ந்து 'தலையெங்கே காலெங்கே'

எனத் தெரியாமல் தடமழிந்த ஆட்சிகளும் உண்டு! அந்நிலை உண்டாக அரசியல் வெறியர்களே கட்சி வெறியர்களே சமய வெறியர்களே மொழி வெறியர்களே மாநில வெறியர்களே தூண்டி நில்லாதீர்! நீங்கள் தூண்டி விட்ட பேய் உங்களையும் விட்டு வைக்காது!

என்ன ஆனது இப்போது? என்கிறீர்களா?

இன்னும் என்ன ஆகவேண்டும்?

கருநாடகத்தில் திருவள்ளுவர் சிலை பாடும்பாடு என்ன?

அதே கருநாடகத்தில் சிவாசி சிலைக்கு நேர்வது என்ன? மராட்டிய நாட்டில் அம்பேத்கர் பல்கலைக் கழகப்

பெயர் சூட்டலுக்கு நேர்ந்துள்ளது என்ன?

அயோத்தியில் பாபர் பள்ளி வாயிலுக்கு நேர்ந்த நேர்ச்சி என்ன? இவை மட்டுமா? இவற்றோடு நிற்குமா?

வெறியர்கள் நிற்க விடுவார்களா?

வாருங்கள் தோழர்களே! ஆடிப்பாடுவோம்!

எல்லாரும் ஓர் குலம்! எல்லாரும் ஓரினம்!

எல்லாரும் ஓர் நிறை!

எல்லாரும் இந்நாட்டு மன்னர்!

ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே! இந்த முழக்கம்

போதாதா?

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் என்பது நம்மறை. நாம் ஒத்தது அறிந்து உயிர்வாழ்பவர் என

மெய்ப்பிப்போமா?