உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் வருமுறை

தரம்

என்பது

பலர்

விருப்பத்திற்கும் உரிய பொதுப்பொருள். புவியீர்ப்பு என்பது உலகு பொதுப் இருப்பினும், நியூட்டனாரால் எப்படி மெய்ப்பிக்கப்பட்டுப் பின்னே உணரப்பட்டதோ, அப்படியே மாந்தன் நுகர்வு என்று உண்டாயதோ அன்றே அமைந்து கிடந்தது தரம்.

தக்கதைத் தெரிந்து துய்க்க மாந்தன் மட்டுமல்லன்; அவனிற் குறைந்த அறிவுடைய உயிரிகளும் கண்டு கொண்டுள்ளன. அவை, விரும்பித்துய்ப்பன, கொள்ளாமல் தள்ளுவன- என்பவை, தரங்கண்ட தகுதியால் உண்டாவனவாம்.

பானை வனையத் தொடங்கிய மாந்தன், தக்க மண்ணைத் தெரிந்தான்; அதனையும் குழைத்தும் மிதித்தும் அடைந்தும் பதனேற்றினான். ஆயினும் சுட்டால் அன்றிக் கெட்டித் தன்மை அமையாது எனக் கண்டான். சுடுதலிலும் ஓரளவீடு வேண்டுமென உணர்ந்தான். குறைவெப்பு கரைவுக்கும், நிறை வெப்பு கிட்டமாகிப் போதற்கும் இடமாமெனப் பட்டறிவால் உணர்ந்து சமன்பாட்டு வெப்பைப் பயன்படுத்தினான். வாழ்நாள் பொருள்களோடு வாழ்வு முடிந்த பின்னரும் பயனாம் முதுமக்கள் தாழிக்கும் அச்சுடுமண் தாழிகளைப் பயன்படுத்தினான். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட முதுமக்கட்டாழிகளையும் அகழ்வாய்வு கண்டிருத்தல் அத்தொன்மாந்தன் உருவாக்கத்திலேயே 'தரம்' இருந்தது என்பதைப் புலப்படுத்தும்.

சிற்றன்ன வாயில் ஓவியங்கள் எத்தனை நூற்றாண்டுகள் ஆகியும் தம் வண்ணம் குலையாமல் காட்டுவதைக் காண்போர் அதற்குப் பயன்படுத்தப்பட்ட வண்ணக் கலவையின் தரமேம் பாட்டை உணராமல் போகார் இன்று வாங்கிய சீலையை நீரில் தோய்க்க, அது ஒன்றுக்கு முக்காலாய்ச் சுருங்கிப் போகவும், துணி கையோடு வரு வண்ணம் நீரோடு போகக் காண்பார் சிற்றன்ன வாயில் சிறப்பை எண்ணித் திளைப்பார்.