உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

பொருளில் தரம் கண்டு, அதற்கு அடையாளமும் செய்து வைக்கும் அரசு நடைமுறை மிக முற்படவே இருந்தது. அதற்கு ஆணி முத்து, ஆணிப் பொன் என்பவை சான்றாம்.

தரமிக்கது என்பதற்கு உரையாணி யிட்டு வைக்கப் பட்டவையே அவையாம்.

தங்கத்திற்கு மாற்றுக் கண்டு விலைமதிக்கப்பட்டமை 'உரைகல்' எனப்படும் 'கட்டளைக் கல்' கொண்டு தெளியலாம்.

வயிரங்களின் தரம் நன்கு மதிக்கப்பட்டமை நூல்களால் அறிய வருகின்றது. அவற்றை ஆராயவல்லார் 'நோட்டகர்' எனப்பட்டனர். 'காகபாதம்' 'கிளிச்சிறை' என்பன வெல்லாம் வயிரக் குற்றம், பொன்வகை என அறிய வருவதால் தரப்பாடு ருந்தமை அறியவரும். புலிபொறித்துப் புறம் போக்கிய வெளி நாட்டு வணிகச் செய்தியைப் பட்டினப்பாலை பகர்கின்றது: கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப்பல பொதி" என்பதும் அறிய வருகின்றது. இவற்றால் அரசு முத்திரை இடப்பட்டதும், அளவிடப் பட்டதுமாம் செய்திகளை உணரலாம். 'கண்திரள் நோன்காழ்' எனப் படைக்கருவிகளின் பிடி கூறப்படுவதால் அதன் தரப்பாடு புலப்படும்.

66

சி என்பது மதில்; அது செம்புருக்கு நீர் விட்டுச் செய்யப்பட்டதை உரைக்கும் சொல்லாகும்.

கடுக்காய்ச்சாறு, தான்றிக்காய்ச்சாறு, பனஞ்சாறு முதலியவை கலந்து உறுதியாக்கப்பட்ட அரைவைச் சுண்ணத்தால் எழுப்பப் பட்ட மதில், பகைவரால் அழிக்க முடியாத திண்மையுடன் விளங்கியமையால் கன்னி மதில் எனவும், மதிற்குமரி எனவும் வழங்கப்பட்டமை புறத்திணைச் செய்தி.

ஒரு நாளைக்கு எட்டுத் தேர்களைச் செய்ய வல்ல தேர்ச்சியாளன் ஒரவன், ஒரு திங்கள் முயன்று ஒரே ஒரு கால் (சக்கரம்) செய்தால் அஃது எப்படி உறுதியாக இருக்குமோ அப்படிப்பட்ட உறுதி எனப் புறநானூற்றில் வரும் செய்தி தரமேம்பாட்டை இனிதின் உணர்த்தும்.

பாலாடை அன்ன நூலாடை, இழை மருங்கறியா நுழைநூற் கலிங்கம், நோக்கு நுழை கல்லா நுண்பூங்கலிங்கம் ன்ன பல ஆட்சிகளால் நெசவுத் தொழில் தரப்பாடு எளிதில் விளக்கமாம்.