உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரக்கட்டுப்பாடும் திருக்குறளும்

299

தரமேம்பாடு குறித்த தமிழிலக்கியச் செய்திகளைத் தொகுப்பின் ஒரு பெருநூலாம் தகையதாம். இவண், திருக்குறள் ஒன்றனையே முன் வைத்து இந்த ஆய்வு செய்யப்பட்டதாம்.

பண்டிருந்தே கண்டு வரும் 'தரம்' ஓரியக்கமாகத் ‘தரக்குழு' எனவும், 'தரமேம்பாட்டுக்குழு' எனவும் (Quality Circle) கண்டு வளர்க்கப்பட்டது. சப்பான் நாட்டிலேயே ஆகும். அதனைக் கண்ட அறிஞர் இசிகாவோ என்பார். ஆண்டு 1962.

சப்பான் நாட்டுக்கு மட்டுமே இக் கொள்கை பொருந்தும் என்ற நிலைமை மாறி, 'உலகப் பொதுக்கொள்கையாம் தகுதியது இது' என வளர்ந்த நிலையில், இந்திய அரசு முதன்முதலில் ஐதராபாத்தில் பாரத கனரகத் தொழிற்சாலையில் (BHEL) இந்த ஆய்வுக்குழுவைத் தொடங்கியது. இதன் தலைமை அலுவலகம் செகந்தரா பாத்தில் இயங்கி வருகின்றது.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தரமேம்பாட்டுக் குழுமம் 1986இல் தொடங்கியது. அது பலப்பல குழுக்களை உருவாக்கித், தக்க அலுவலர்களைக் கொண்டு பயிற்சி தருகின்றது. உயர்மட்டக் குழுக்களை அமைத்துச் செயற்பாட்டு ஆய்வும் மேற் கொள்கின்றது. பல்வேறு நிறுவனங்களில், இக்குழு செயல்படும் வகையை ஆய்ந்தும் வருகின்றது. வெளிநாட்டு நிறுவனங்களில் உள்ள, குழுக்களொடும் தொடர்பும் கொண்டு வருகின்றது. (நெய்வேலி பழுப்பு நிலக்கரி தரமேம்பாட்டுக் குழும்பு வெளியீடுகள்). இதன் தொடக்க நிறுவனரும் இயக்குநரும் திரு. நாராயணர் ஆவர்.

-

நெய்வேலி உலகத்தமிழ்க் கழக ஏற்பாட்டில் திருவள்ளுவர் கோட்டத் தொடர் பொழிவுக்குச் செல்லும் வாய்ப்பால், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனப் பயிற்சி வளாகத்தில் திருக்குறளும் தரமேம்பாடும்' என்னும் தலைப்பில்யான் பொழிவு செய்ய வாய்த்தது. அதனைத் தூண்டியவர் செயற் பொறிஞர் திரு.மு.அறவாழியார்அதனைத் துலங்கச் செய்தவர் பயிற்சி வளாகத் துணைத் தலைமைப் பொறிஞர் திரு.பி. சுப்பிரமணியனார். அப்பொழிவு 4.10.93 இல் நிகழ்ந்தது.

அப்பொழிவுச் செய்திகள் அவையோர் உளங்கொள உவப்பாயின. அதனால் திருக்குறளில் தொழில் தரமும் உறவும் செய்தல் வேண்டுமென்னும் வேண்டுகை வெளிப்பட்டது. அப்பொழிவை 25.11.93 இல் (முற்பகல்9.30 - 1.00; பிற்பகல் 2.00 - 5.00) நிகழ்த்துவது எனவும் முடிவாயிற்று.