உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

40 ஓ

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

காலம்கடந்த, இடங்கடந்த பொதுமைத் திருக்குறளில் புதையுண்டு கிடக்கும் பொருள்களைத் துறைதோறும் அகழ்ந் தெடுத்துத் தரவல்ல பெருமக்கள், திருக்குறளில் பொருளியல், திருக்குறளில் சட்ட இயல், திருக்குறளில் அறிவியல் என நூல்கள் கண்டு வருகின்றனர். அவ்வகையில் 'திருக்குறளில் தொழில் தரமும் உறவும்' என்னும் புதுப்பார்வையில் காணப்பட்ட நூல் துவாகும்.

இந்நூல் உருவாக்கத் திட்டம் என்னுள் எழுந்தது எதனால்? நெய்வேலி பபப்பு நிலக்கரி நிறுவனத் தரமேம்பாட்டுக் குழுமத்தின் பொழிவு ஏற்பாட்டால்தானே! ஆதலால், இப்புத்தம் புதுத் துறையில்திருக்குறளை நோக்க வைத்த அக்குழுமத்தினர் அனைவர்க்கும் நெஞ்சார்ந்த நன்றியன்.

நூல் எழுத்துருவில் கிளர்ந்தாலும் அச்சுருக் கொண்டால் தானே பயன் பழ மரமாய்ப் பலர்க்கும் பயன்படும். அதனை ஆர்வத்தால் செய்து புத்தம் புதுத் துறைப் பார்வையில் புகழ்க் குறளை உலா வர விடுபவர்கள் கழக ஆட்சியாளர் மேதகு இரா. முத்துக்குமாரசாமி அவர்களாவர். அவர்களுக்கும் கழகத்திற்கும் என்றும் போல் இனிய நன்றியன்.

திருவள்ளுவர் தவச்சாலை அல்லூர்

திருச்சி மாவட்டம்

தமிழ்த்தொண்டன் இரா. இளங்குமரன்