உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

6. செயலில் ஈடுபட்டவர் அனைவரும் சுற்றமாகச் சுற்றிக் கொள்ளத்தக்க தலைமை அமைவதாக (574)

7. திறமிக்கோர் தகுதியை மதித்துத் தலைமை அறியச் செய்து சிறப்புறுத்து

(665)

8. மாந்த நேயம் வேறு; தொழில் திறம் வேறு; தொழில் திறத்தை மதிப்பீடு செய்தலில் வரிசை அறிதல் முறையாகும்

9. தக்காரை

(528)

மதித்துத தகவிலாரைத் தண்டித்தல்

முறையான செயலாம் (540)

அதற்கென நாளும் பொழுதும், கண்காணிப்புத் தவறாமை வேண்டும் (520, 553, 1039)

10. தலைமைத் தகுதியே நிறுவனத் தகுதியாம் (547, 740, 750,

770)

நிறுவனச் சிர்மைக்கு உரியவை வை என எண்ண வைக்கும் திருவள்ளுவர், இச்சீர்மை இல்லாக் கேட்டுக்கு வழியாவன இவை என்பதைச் சுட்டாமலும் விட்டார் அல்லர். அவற்றுள் சில:

1. செய்யத் தக்கதைச் செய்யாமை, செய்யத் தகாததைச் செய்தல் ஆகியன இருபால் கேடுகள்

(466)

2. கால நீட்டிப்பு, மறதி, சோம்பல், நெட்டுறக்கம் என்பவை நாற்பெருங் கேடுகள்

(605)

3. ஒன்றற்கு ஒன்று மாறான குழுக்கள், பாழ்படுத்தும் உட்பகைவர், இறையாண்மையை அழிக்கும் குறும்பர் ஆகியவர் நிறுவனக் கேடர்

(735)

4. உரிய காலத்தில் உரிய வகையில் முயலாத முயற்சி, பின்னே பலர்நின்று முயன்றாலும் முடியாததேயாம்

(468, 535)

5. தெளிவின்றி ஒருவனை நம்புதலும், நம்பியவன் மேல் ஐயப்படுதலும் நீங்காக் கேடுகள்

(510)

6. கடுஞ்சொல், கடுமுகம், முறைகேடாம் தண்டனை என்பவை தலைமையைத் தகர்க்கும் தன்மைகள்

(566, 567)