உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரக்கட்டுப்பாடும் திருக்குறளும்

ன் + அம் = இனம். தனக்கு இன்பம் செய்வதாக

இன் +

அமைந்தது எதுவோ அதுவே இனமாம்.

305

அவ்வினம், செவ்வினமாக அமைந்து அளவளாவிக் கடமை புரிந்தால் எத்தரமும் உருவாக்கத்தில் அமைதல் உறுதி”

“கரை இல்லாமல் ஏரி குளங்களில் நீரைத் தேக்க இயலாது. அதுபோல் அளவாளவுதல் இல்லாத வாழ்வில் ஒட்டுறவு ராது" என்பது திருக்குறள் (523)

அளவளாவுதல் என்பதே மனக்கலப்பில் உண்டாவது. மனக்கலப்பு, இருமையை ஒருமையாக்கிவிடும். இரண்டற்ற ஒன்றில் சிக்கல் தலைகாட்ட இயலாதே! அதனால், நினைத்தவை நினைத்தபடி நிறைவேறும் என்றார் திருவள்ளுவர்.

இனிய அளவளாவுதல், இரண்டற நிரந்துவிடுதல் ஆகிய இரண்டும் கூடிய இனத்தொடும் கலந்து பேசி உருவாக்கம் புரிந்தால், அவ்வுருவாக்கத் தரம் மிக உயர்ந்ததாகவே இருக்கும்.

அதனால்,

"தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல்” (462)

என்றார்.

தரஞ்சிறக்க வழிகள் :

செயல் சிறந்து தரஞ் சிறந்து விளங்க வழிவகைகளையும் காட்டுகிறார் திருவள்ளுவர். அவை:

1. எந்தச் செயலில் ஈடுபட்டாயோ, அந்தச் செயலுக்குக் கேடான எதனையும் செய்யாதே

(612)

2. எந்தச் செயலைச் செய்ய எடுத்துக் கொண்டாயோ அதனை அரைகுறையாகச் செய்யாதே.

(674)

3. செய்யும் செயலில் தேர்ச்சி மிக்கவர் நட்பை விடாதே

(519)

4. தேர்ந்தோரினும் தேர்ந்தோர் உறவை மாறாமல் பற்றிக்

கொள் (519)

5. செயலின் உட்கூறுகள் அனைத்தும் அறிந்தவன் செயல் திறத்தைப் போற்றிக் கொள்.

(677)