உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304

ஒப்புரவு :

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

ஆன்றோர் சான்றோர் என்பவற்றைப் பொதுமக்களும் அறிவர். புலமையாளரும் அறிவர். ஆன்றோர், அறிவறிந்தோர்; சான்றோர் பழிபிறங்காப் பண்பினர். நல்லறிவும் நற்பண்பும் உடையவரின் நயத்தக்க உருவாக்கம், தர மேம்பாடு மிக்கவையாகவே இருக்கும் என்பதை நம்பலாம். ஏனெனில், நல்லறிவும் நற்பண்பும் தரக்கேட்டை உருவாக்கத் தலைப்படா

தம்மைப் போலவே பிறரையும் கருதிச் செயலாற்றச் செய்வது நல்லறிவு.

தம்மைப் போலவே பிறரும் நலம்பெற விழைந்து செயலாற்றுவது நற்பண்பு.

இவை பிறர் நலம் தம் நலம் என்னும் இரண்டையும் ஒப்புக் கொள்ளும் ஒப்புரவு கொண்டவை.

ஒப்புரவு உள்ளத்தின் உருவாக்கம், ஒரு நாளும்

குறைவும் கேடும் உடையதாக மாட்டா

“அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதினோய்

தந்நோய்போல் போற்றாக் கடை

55

"பிறர் துயரைத் தம் துயர்போல் கருதாது செயலாற்றும் அறிவு அறிவாகாது என்றே தள்ளப்பட்டது. வள்ளுவப் பெருந்தகையால்!

தரமேம்பாடு:

இனித், தர மேம்பாட்டுக்கு வள்ளுவர் காட்டும் வழிகள் எவையேனும் உண்டா? என எண்ணலாம்.

வள்ளுவத்தின் ஒட்டு மொத்த ஊடகமே, "பிறர்க்கு மட்டுமன்று; பிறவுயிர்க்குத் தீமை செய்யாமை" என்பதேயாம். இந்நோக்கு இல்லாமல் எதனையும் சொல்லாப் பெரு நோன்பர் அவர. ஆதலால், எவ்வுயிர்க்கும் தீமையிலா நல்லாக்கமே வள்ளுவர் வழங்கும் ஆக்கமாம்.

இனம் :

ஓர் உருவாக்கத்தில் ஈடுபடுவார் ஓரினத்தராகத் திகழ வேண்டும் என்பது வள்ளுவர் உள்ளகம்.