உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய் நேர்த்தி :

தரக்கட்டுப்பாடும் திருக்குறளும்

303

ஒரு விருந்து! அந்த விருந்தின் சமையல் சிறப்பு இலையில் புலப்பட்டு விடும். 'செய்நேர்த்தி'யமைந்த விருந்தில், இலையில் ஒதுக்கும் பொருள் இல்லையாய் ஒழியும். செய்நேர்த்தி இல்லாச் சமையலில், இலையில் வைத்தது வைத்தபடி கிடந்து குப்பையாய்க் குவியும்.

வாங்கப்பட்ட பொருளில் குறைவு இல்லை; ஆகிய செலவில் குறைவு இல்லை. செய்நேர்த்தி இல்லாமையால் அவை பாழய்ப் போயின. செய் நேர்த்தியால் எவ்வளவு எளிய பொருளும் தரத்தில் உயர்ந்து விளங்குதலும், செய்நேர்த்தி இல்லாமையால் எவ்வளவு உயர்ந்த பொருளும் தாழ்ந்து போதலும் நாம் காண்பனவே.

கலைநயம் :

கால் மிதியாகக் கிடந்து தடுக்கிவிடும் கல், ஒரு கலை வல்லான் கண்பட்ட கை பட்ட - அளவில், எப்பேறு பெற்று விடுகின்றது! மிதிக்கப்பட்ட கல்லே அவன் கலைத் திறத்தால் மதிக்கப்பட்ட சிலையாகிச் சிறப்புறுவது நாம் காணாததா! அறிவும் பண்பும் :

உள்ளம், செய்நேர்த்தி, கலைநயம் என்னும் மூன்றும் உருவாக்கப் பொருளின் தரத்தைத் தீர்மானிப்பவை என்பதை ஆய்ந்தோம். இம்மூன்றற்கும் அடிப்படையாய் - ஆணிவேராய் இருக்கும் மாந்தர் நிலைமை எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பதை ‘மக்கட் பேறு' கூறும்போதே கூறுகிறார் திருவள்ளுவர்.

"பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற”

“எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்"

என்பன அவை. ஆதலால்,

1. அறிவறிந்த மக்கட் பிறப்பாக இருத்தல்

(61)

(62)

2.பழிபிறங்காப் பண்புடை மக்கட் பிறப்பாக இருத்தல் என்பவை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனியவை என்றார் வள்ளுவர்(68)