உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

தர உருவாக்கம்:

-

இளங்குமரனார் தமிழ்வளம் 40

இனித் ‘தரம்’, பொருளுக்கு எப்படி வந்தது? எப்படி வரும்? பொருளை உருவாக்குபவர் உள்ளத்தில் தரம் இருந்தால் பொருளிலும் தரம் இருக்கும். ஆதலால், உருவாக்கப்படும் பொருளின் தரம் உருவாக்குபவர் உள்ளத்திலேயே கூடுகட்டி உறைகின்றதாம். இனி, உள்ளத்தில் தர நோக்கு இருந்தால் மட்டும் போதுமா? தர நோக்கு இருத்தலோடு செய்நேர்த்தியும் உருவாக்குபவர்க்கு இருத்தல் வேண்டும். செய்நேர்த்தியோடு 'கலைநயமும்' வேண்டும் என எண்ணத்தை விரிவுபடுத்திக் கொண்டால். பொருளின் தரம் எல்லா நிலைகளிலும் சிறக்குமாம். அவை:

1. உருவாக்கும் பொருளின் 'தரம்' உருவாக்குபவர் 'உள்ளத்'திலேயே உள்ளது.

2.உருவாக்குவார் 'செய் நேர்த்தி' பொருளைத் தரப்

படுத்துகிறது.

3. உருவாக்குவார் 'கலைநயம்' கவர்ச்சியைக் காட்டிக் கமழ்கின்றது. இம் மூன்றும் அமைந்த நிலை ஒரு பொருளின் தரமாகின்றது. இம்மூன்றும் அமையாமை ஒரு பொருளின் தரக்குறையும் தரக்கேடு மாகின்றது.

உள்ளம்:

தென்னை, பனை, ஈந்து ஆகியவற்றின் பாளையிலே இருந்து வழிவது ஒருவகை நீர்தான். அதனைக் ‘கனிவு உள்ளம்' பதனீ ராக்கி நலம்செய்கின்றது. அதனை மற்றோர் 'காசுள்ளம்' கள்ளாக்கிக் குடி கெடுக்கின்றது. (காசு - குற்றம்; பணம்) நல மாக்குவதும் கடி கெடுப்பதும், தென்னை பனை ஈந்துப் பாளைகளில் இல்லை. அவற்றின் பயன் கொள்ளும் உள்ளங்களிலேயே அவை இருந்தன என்பது புலப்படும்.

'அறிவு உள்ளம்' அணுவைக் கண்டது; ஆக்கப் பயன் பாட்டைக் கருதியே அதனைக் கண்டது. ஆனால், 'அழிவு உள்ளம்' என்ன செய்கிறது? அழிவுக்குப் பயன்படுத்துகிறது. அணுவில் ஆக்கமோ அழிவோ இல்லை. அதனைப் பயன்படுத்தும் உள்ளத்தில்தான் ஆக்கமும் அழிவும் உள்ளன. ஆதலால், ஒவ்வோர் உருவாக்கமும் உள்ளத்தின் சாயலில் உருவாகின்றது என்பது புலப்படும்.