உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைச்செய்தி

மேல்வரும் செய்திகளை அறிந்து கொள்ளுதல், நூலைக் கற்றுப் பயன் கொள்வதற்கத் துணையாகும். 1. 'தரக்கட்டுப்பாட்டுக் குழும்பு' என்றால் என்ன?

ஒரே இடத்தில் ஒரே வகையான தொழில் புரிபவர் தாமாகவே தம்மிச்சையாக எவர் அதிகாரத்திற்கும் ஆட்படாமல் 4 பேர் முதல் 6 பேர் வரை சேர்ந்து குழுவாக அமைந்து, அக் குழுவின் தலைவரையும் தாங்களே தேர்ந்தெடுத்து மேலாண்மை ஒப்புதலுடன் வேண்டும் போதுகளில் கூடித் தங்கள் தொழிற் பகுதிச் சிக்கல்களைத் தாங்களே தேர்ந்து தெளிந்து தீர்மானித்து மேலாண்மை சைவுடன் நடைமுறைப்படுத்தும் தொழில் குழுவாகும்.

2. தரம் என்றால் என்ன?

ஒரு தொழிலகம் தான் உருவாக்கும் பொருள்களை, நுகர்வோர் எதிர்பார்ப்புக்கும் நிறைவுக்கும் தேவைக்கும் தக்க வகையில் உருவாக்கித் தருவது தரம் ஆகும்.

நுகர்வோர் விரும்பாவிடின் உருவாக்கத்தால் பயன் உண்டாகாது. ஆதலால் நுகர்வோர் நிறைவே உருவாக்கத்தின் மூலமாகக் கொண்டு செயல்படுவதே தரம் ஆகும்.

தரம் ஒரு நிலைப்படுதல் இயலாது. நுகர்வோர் "இப்படி இருந்தால் இன்னும் நலமாம், பயனாம்' என, உருவாக்கத்தைப் பயன்படுத்தி வரும் நிலையில் எண்ணுவார். அவர் எண்ணத்தைக் கருதித்தக்க வகையில் வேண்டும் விரிவும் மாறுதலும் செய்து வருதலும் தரத்தொடு கூடியதேயாகும்.

3.

தரக்கட்டுப்பாட்டுக்

தொழிலாளர்க்கு ஏற்படும் நன்மைகள் எவை?

குழும்பினால்

எடுத்த பணியில் முழுமையாக ஈடுபடும் எண்ணத்தைத் தூண்டி வளர்க்கும்.