உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரக்கட்டுப்பாடும் திருக்குறளும் ஓ

309

தொழிலாளர் அலுவலர் மேலாண்மையர் இணைப்பு இயல்பாக உண்டாகிச் சிறக்கும்.

எண்ணும் ஆற்றலை ஊக்கிக் கண்டு பிடிப்பாளியாகத்

தூண்டும்.

.

தனித் தனித்திறங்கள் சுடர்விட வாய்ப்பளிக்கும்.

தக்க மதிப்புரிமைக்கும் பரிசு பாராட்டுகளுக்கும் இடமாக்கும்.

வழிகாட்டும் தலைமை உருவாக உதவும்.

4. தரக்கட்டுப்பாட்டுக் குழும்பினால் நிறுவனத்திற்கு உண்டாகும் நலங்கள் எவை?

நுகர்வோர் விரும்பத்தக்க பொருள்கள் உருவாக்கப் படுதலால் அவை தேக்கமின்றி விலையாகி விடுகின்றன.

வாடிக்கையாளரைப் பெருக்கி வருவாயையும் பெருக்கு வதால் தொழிலகத்தை விரிவாக்க உதவுகின்றது.

தொழிலக ஆட்சி ஒப்புரவுடனும் நெருங்குதலுடனும் இயல்பும் இனிமையும் உடையதாகி விடுகின்றது.

தொழிலகச் சேதமும் சிதைவும் குறைந்தும் இல்லாதும் போகின்றன.

பிற தொழிலகங்களின் முன்னேற்றத்திற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றது.

5. தரக்கட்டுப்பாட்டுக் குழும்புகள் தீர்க்கும் சிக்கல்கள் எவை? அ) தரம் :

தவறான வேலைகளைக் குறைத்தல் கழிவுகளைக் குறைத்தல் நுகர்வோர் குறைகளைக் குறைத்தல்

நுகர்வோர்க்கு வேண்டும் சேவையை மிகுத்தல்.

ஆ) உருவாக்கச் செலவு :

மூலப்பொருள் வீணாதலைக் குறைத்தல்

தேய்மானச் செலவைக் குறைத்தல்

இ) உருவாக்கத்திறன் :

மாந்தரும் பொறிகளும் உருவாக்கும் திறனைப் பெருக்குதல்.