உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312

66

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்”

என்றார் உழவைக் கூறும் கிழவர் திருவள்ளுவர். இது தொழுது தொழிலைத் தொடங்கி, உலகத்தைக் காப்பாரை, உலகமே தாழுகின்ற உயர்வு குறிப்பதாம். ஆதலால், தொழுதற்கும் தொழப்படுவதற்கும் இடமாக இருப்பது தொழிலாகும்.

இனித்தொழுதல் என்பதுதான் என்ன? என்பதையும் திருக்குறள் விளக்குகிறது. கைகூப்பி வணங்கும் கும்பிடுதலே வள்ளுவராலும் குறிக்கப்படுதல் விளங்குகின்றது.

"எல்லா உயிரும் கைகூப்பித் தொழும்” (260)

“தொழுதகை யுள்ளும் படையொடுங்கும்” (828)

என்பவற்றில் 'தொழுகை' சுட்டப்படுதல் அறிக. 'தொழுகை' வழிபாட்டுப் பெயராகவும், வழிபாட்டு இடப் பெயராகவும் வளர்ந்தமையும் காண்க.

தொழில் பற்றிக் கூறும் வள்ளுவர் பொதுநிலை, சிறப்பு நிலை என்னும் இருவழிகளிலும் கூறுகிறார். பொதுநிலைபற்றிக்

கூறுவன,

வினைத்தூய்மை (66), வினைத்திட்பம் (67), வினை செயல்வகை (68), ஆள்வினையுடைமை (62), என்பனவாம். பிற அதிகாரங்களிலும் பொது நிலைக் குறிப்புகள் சில உண்டு.

உழவு என்பது சிறப்பு அல்லது தனி நிலைத் தொழில் (104) பற்றியது. பிற அதிகாரங்களிலும் சிறப்பு நிலைக் குறிப்புகள் சில உண்டு.

வினைத்தூய்மை :

66

"ஒரு செயலைச் செய்தற்குத் துணையாக வருவாரின் நல்ல திறமும் நலப்பாடும் மிகுபயன் செய்யும். ஆனால் அவற்றோடு அச்செயலைச் செய்யும் தேர்ச்சியும் நன்றாகத் தனக்கு அமைந் திருந்தால், அவன் விரும்பும் நலங்களையெல்லாம் குறையாமல் தரும்" என்கிறார். 'துணை நலம் வேண்டும்' என்று கூறும் திருவள்ளுவர், அத்துணை நலத்திற்கும் மேலானது ‘வினைநலம்’ என்னும் 'செயல்தேர்ச்சி' என்கிறார்.

துணை நலத்தால் மட்டும் முழுப்பயன் எய்துதல் இயலாது; தன் செயல் தேர்ச்சி இன்றியமையாதது; தன் செயல் தேர்ச்சியே, துணையாக வருவார்க்கும் ஊக்குதலாக இருந்து வெற்றியை