உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314

இளங்குமரனார் தமிழ்வளம் - 40 40 ஓ

இனித் தெரிந்து தேர்ந்த தொழிலைச் செய்யும் வகைக்கும் தெளிவு காட்டுகிறார் திருவள்ளுவர். அது, மருத்துவத் தொழிலுக் கெனச் சொல்லப்பட்டாலும் பொதுப்பயன் உடையதாகும்.

"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்”

என்பது அது (948).

வெளிப்பட விளங்கும் நோயை அறிந்து, அந்நோய் உண்டாதற்கமைந்த அடிப்படையை ஆய்ந்து, அந்நோயைத் தீர்க்கும் வகையை ஆய்ந்து, ஆய்ந்து கண்ட வழிமுறை தவறாமல் கடமை புரிந்து நோய்த் துயர் அகற்ற வேண்டும் என்கிறார். இதனை விரிந்த வகையால் வினைசெயல் வகையில் விளக்குவதை மேலே காணலாம்.

எடுத்துக் கொண்டு முடிக்க விரும்பும் செயல், 'தூய்மை' உடையதாக இருக்க வேண்டும். கறை உடையதாகவோ, குறை உடையதாகவோ, பழியும் இழிவும் அழிவும் தருவனவாகவோ இருத்தல் ஆகாது என்பதற்காகவே 'வினைத் தூய்மை' என்பது அதிகாரப் பெயராயிற்றாம்.

"தூய்மையாவது யாது?” என்பதையே மேல்வரும் ஒன்பது பாடல்களிலும் தெளியத் தெளிய விளக்குகிறார்.

செய்யவிரும்பும் தொழில், செய்பவனுக்குப் புகழ் தருவதாக இருக்க வேண்டும்; புகழ்மட்டும் போதாது; அவனுக்கோ, நாட்டுக்கோ தீமை தாராமல், நலம் சேர்ப்பதாகவும் இருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட செயலையே தேர்ந்து கொள்ளுதல் வேண்டும்; மற்றைச் செயலைக் கொள்ளாமல் தள்ள வேண்டும்.

தொழிலில் புகழ்த் தொழில் பழித்தொழில் உண்டோ? என்னும் ஐயம் நிகழலாம். வழிப்பறி செய்தலைத் தொழிலாகக் கொள்வார் இலரா? வட்டும் சூதும் வருவாயாகக் கொள்வார் இலரா? மட்டும் மதுவும் விட்டு மயக்கிப் பறிப்பார் இலரா? பரிசுச்சீட்டு, களியாட்டம், தவணைக்கடை, காசுமாற்றம் என்பனவற்றால் அழிவேலை செய்வார் இலரா?

ஒருவன் வாழும் போதும் பெருமையாக வாரவேண்டும்; மறைந்த பின்னரும் அப்பெருமை நிலைபெறவேண்டும். உள்ள போது இருக்கும் பெருமை 'ஒளி' என்றும், மறைந்த பின்னரும் மறையாமல் விளங்குவது 'புகழ்' என்றும் சொல்லப்படும் அவ்வொளியையும் புகழையும் ஒருங்கே கெடுக்கும் செயலைச்