உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரக்கட்டுப்பாடும் திருக்குறளும்

315

செய்யவா ஒருவன் கருத வேண்டும்? அவன் வாழ்வுக்குக் கை கொடுக்க எத்தனை எத்தனை புகழ்த் தொழில்கள் காத்துக் கிடக்கின்றன. ஆதலால்,

66

“என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு

நன்றி பயவா வினை”

“ஓஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னும் அவர்”

என்கிறார்.

(652)

(653)

‘ஒருவுதல்' என்பது நீக்குதல்; ‘ஓஓதல்' என்பதும் அது. ‘மாழ்கும்’ என்பது கெடுதல்; 'ஆஅதும்' என்பது ஆக்கம் பெறுவோம், நலம் பெறுவோம் என்னும் பொருளது.

தொழில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் போதே அதன் விளைவையும் எண்ணித் தேர்ந்தெடுத்தல் வேண்டும் என்பதை வலியுறுத்தியே இவ்வாறு கூறுகிறார். மேலும் கூறுவார்:

-

ஒரு செயலைச் செய்யத் தொடங்குவார் உறுதியாக - திண்ணமாக எண்ணித் தொடங்குதல் வேண்டும். அவர்கள் தெளிந்த எண்ணமும், உறுதிப்பாடுமே அச் செயலை வெற்றியாக நிறைவேற்றும். இடைஇடையே தடைகள் உண்டாகலாம்; சிக்கல்கள் நேரலாம். அந்நிலையில் உறுதிப் பாட்டில் தளர்தல் ஆகாது. வெள்ளத்தில் இறங்கு முன்னரே எண்ணிப் பார்த்து இறங்குதல் வேண்டும். துணிந்து இறங்கி நட்டாற்றில் செல்லும் போது உறுதி குலைந்தால் அக்குலைவே வெள்ளத்தோடு வெள்ளமாக அடித்துக் கொண்டு போகத் துணையாகிவிடும். தன்மனமே தனக்குத் துணையாக-துணிவாக அமையாத நிலையில் எதுதான் துணையாக - துணிவாக அமையும்?

இடுக்கண் ஏற்படலாம்; எவர்க்குத்தான் இடுக்கண் ஏற்படவில்லை? எத்தொழிலில்தான் இடர்ப்பாடு இல்லை? உண்ணும் போது புரையேறுதலால் உயிர்போனவர் இலரா? புகைக்குள் புகுந்து மூச்சுமுட்டி முடிந்தவர் இலரா? அருவி ஒழுக்கில் நின்று ஆவி போனவர் இலரா? மாடியில் இருந்து விழுந்தவர் பிழைத்துக் கொள்ள, மடியில் இருந்து விழுந்த குழந்தை முடிந்து விடுவது இல்லையா?

-

துன்பம் வந்தது என்பதற்காக மனஞ் சஞ்சலமுற்று எதனையும் செய்ய, அறிவாளன் உறுதியாளன் துணிதல் ஆகாது. இழிவுதாராத செயலையே செய்தல் வேண்டும்.