உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

"இடுக்கட் படினும் இளிவந்த செய்யார்

நடுக்கற்ற காட்சி யவர்” (654)

காட்சியாவது அறிவு. நடுக்கு அசைவு; இளிவு இழிவு.

-

-

ஒரு செயலைச் செய்யத் தொடங்கியதும் அல்லது செய்யும் போது அல்லது செய்து முடித்தபின், “இதனையா செய்தோம்; என்ன தவறு செய்து விட்டோம்; இதனைச் செய்யாமல் இருந்திருக்கலாமே" என்ற எண்ணங்கள் செய்தவனுக்கே உண்டாதல் உண்டு. அப்படி ஒன்று நிகழ்ந்துவிட்டால், நிகழ்ந்து முடிந்ததற்கு என்ன செய்வது? அத்தகு வருந்தத்தக்க செயலை மீளவும் மறந்தும்கூடச் செய்தல் ஆகாது. தவறு என்று உணராமல் செய்த குற்றத்தினும் தவறு என்று உணர்ந்தபின் செய்யும் குற்றம் பெருங்குற்றமாம். அதனால்,

"எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்ற”

என்றார் (655)

தன் பெற்றோரைப் பேணல் எவர்க்கும் பெருங்கடமையாம். அவர்கள் தன்னை ஆளாக்கப் பட்டபாடுகளை நினைவான், அவர்களைப் பொன்னினும் மேலாகவும், கண்ணின் மணியினும் மேலாகவும் காத்தல் வேண்டும். அத்தீராக் கடமையைத் தீர்க்க வேண் டி க்கூடத், தீராப்பழிச் செயலைச் செய்தல் ஆகாது என்பது திருவள்ளுவம்.

“ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை”

என்பது அது (656)

தன்னைப் பெற்றவள் ஈன்றாள்; அவ் வீன்றாள் வயிறே தன்னைக் கருவாய் உருவாய்-த்தாங்கி நின்றது. அதுவே பசித்துக் கிடக்கின்றது. அதனை ஆற்றுதல் தன் கடன். அதனை ஆற்றுவதற்கு, அல்ல செயலை ஆற்றுதல் ஆகாது. சான்றோர் புகழ்ந்து சொல்லும் சொல்லைக் கேட்கவே தன்னைப் பெற்ற தாய், அச்சான்றோர் பழிக்கும் செயலைச் செய்து அதனால் வயிறாறும் வழியை ஏற்கவே மாட்டாள். ஆதலால், பழிச் செயல் செய்த பசியாற்றும் கடமைபுரிதல் ஆகாது என்கிறார். ஏனெனில் அப்பழிச் செயல் தாய்மையும் தாங்காப் பழியும், சான்றோர் மதியாப் பழியும், தன்னை மாறா இழிவில் மாட்டும் பழியுமாக