உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரக்கட்டுப்பாடும் திருக்குறளும் ஓ

317

இருத்தலால் என்கிறார். இதனையே வலியுறுத்து முகத்தான் இப்படிப் பழிச் செயல் செய்து தேடும் செல்வத்தைப் பார்க்கிலும் தீரா வறுமையிலே கிடந்து அலைக் கழிந்தாலும் குறையாகாது. ஏனெனில், அவர்தம் பெருமைக்குச் சிறிதும் குறைவாகிவிடாதே என்கிறார்.

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்

கழிநல் குரவே தலை

நல்குரவு - வறுமை; கழிநல்குரவு மிகுவறுமை.

(657)

"இது, ஆக்கச் செயல்; இது, அழிவுச் செயல்; இச் செயல் செய்க; இச் செயல் தவிரக்” எனச் சான்றோர் தெளிவுறுத்தி யுள்ளனர்.

அவர்கள் செய்தல் தவிர்க என்றவற்றைச் செய்தல் ஆகாது. அத்தகையவற்றை எடுத்து வெற்றியாக முடித்தாலும் அது நீங்காப் பழியும் கேடுமே யாம். ஆதலால் வேண்டா என்று சான்றோர் விலக்கிய வினையைச் செய்தல் ஆகாது.

66

“கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்

முடிந்தாலும் பீழை தரும்” (658)

கடிந்த - விலக்கிய ; கடிந்தொரார் - விலக்கி ஒதுக்கார் பிழை - துன்பம்.

பிறர் வாயிலும் வயிற்றிலும் அடித்து அழுமாறும், அவ்வவலத்தாலேயே அழிந்து போகுமாறும் தேடும்பொருள், தேடிய அவனிடத்தில் இருந்தும் அப்படி அழுது அழியுமாறு போய்விடும்; ஆனால், நற் செயல் செய்தலால் இழப்பாகத் தோன்றும் பொருள் கூட, நன் முயற்சியால் இழப்பாகாமல் ஆகிவிடுவது உண்டு.

“அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை

(659)

"பிறரை ஏமாற்றியோ கெடுத்தோ அவர் பொருளைத் தேடிக் கொள்ளலாம் என்று கருதுதல் ஆகாது. அவ்வாறு கருதின் அப்பொருள் பிறரால் அவ்வாறு கவர்ந்து கொள்வதற்கும் மாகும்” என்கிறார். இதனை ஓர் உவமையால் விளக்குகிறார்.

மண்கலங்கள் சுட்டு வலுவேற்றப்படும் சுடப்பட்ட கலத்தில் நீர் ஊற்றி வைக்க முடியும். சுடப்படாத கலத்தில் நீரூற்றினால்