உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரக்கட்டுப்பாடும் திருக்குறளும் ஓ

319

தார்ச் சாலையிலேயே பாரம் இல்லாத வண்டியிலேயே பூட்டிய அளவில் படுக்கும் மாடுகள் எத்தனை?

வண்டி நிரம்பிய பாரம், வழியெல்லாம் குண்டு குழி, சேறு சக்தி; ஆயினும் மண்டியிட்டு இழுத்தும் ஏறாமேட்டில் ஏறிவிடும் மாடுகள் இல்லையா? இதனால்தானே,

“மடுத்தவாய் எல்லாம் பகடு அன்னான் உற்ற

இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து

""

என்றார். எருமைக்கடா, காளைமாடு

(624)

போலும் மனத்

திண்மையாளன், தன்னை வருத்த வந்த துன்பத்திற்கும் வருத்தம் தருவான் என இடுக்கண் அழியாமைக் குறள் கூறிற்று. ஊக்கமுடைமை என்னும் அதிகாரத் தொடக்கமே,

“உடையார் எனப்படுவது ஊக்கம்; அஃதில்லார் உடையது உடையரோ மற்று”

(591)

என

என்கிறது. அடுத்த குறளோ "உள்ளம் உடைமை உடைமை உறுதிப்படுத்துகின்றது (592). ஆதலால் வினைத்திட்பம் என்பது மனத்திட்பப் பயனே என்பது விளக்கமாம். இதனையே இவ்வதிகார இறுதிக் குறளும்,

“எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டாது உலகு"

99

என்கிறது. செயற்பாட்டு உறுதியைக் கொள்ளாதவரை உலகம் ஒரு பொருட்டாகக் கொள்ளாது என்கிறார்.

முதலும் முடிவும் செய்யுங்கால் இடையூறு வரத்தான் செய்யும்; அதனைப் பொருட்டாக எண்ணுதல் ஆகாது; அதற்குச் சற்றும் தளர்தலோ பின் வாங்குதலோ கூடவே கூடாது. இது, வினைத்திட்பத்தைப் பற்றி ஆய்ந்து முடிவு கண்டவர் உறுதியாக உரைக்கும் செய்தியாகும்.

“ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்”

(662)

நடைவழியில் ஒரு சாய்க்கடை அதனைத் தாண்ட வேண்டும்; தாண்டத் துணிந்து கடக்க மாட்டாமல் ஊடே விழுந்தால் என்ன ஆகும்?