உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320

40 ஓ

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

கிணற்றைத் தாண்டுவேன் என்று துணிந்தவன் முக்காற் கிணறு தாண்டி சுவரில் மோதி மூக்குடை படாமல் முடியாதே!

முகடுவரை எழுப்பிய சுவர்மேல் மூடு போடா விட்டால் வீடாகுமா அது?

பொறிகளையெல்லாம் வாங்கிப் போட்டுப், பொருந்தா டத்தில் தொழில் தொடங்கி, முட்டுப்பட்டு நின்றால், கெட்டுப் போக வேறு என்ன வேண்டும்? அதனால்,

“கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை; இடைக்கொட்கின் எற்றா விழுமம் தரும்”

கடைக்கொட்க - நிறைவு கொள்ள ; இடைக்கொட்கின் டைப்பட்டு நிற்க; எற்றா விழுமம் - நீங்காத் துன்பம்.

காலமெல்லாம் கடமையில் ஊன்றியவர்; அயராது பணியாற்றியவர்; பல்வேறு வெற்றிகளைக் குவித்தவர்; அவரால் தொழில் துறையும் அத்தொழிலகமும் தொழில் முனைப் பாளரும் பெற்ற நலங்கள் பலப்பல. எனினும், அவர் ஆள்வோரால் பாராட்டப்படவில்லையே! பரிசு பெறவில்லையே! கண்டு கொள்ளத்தானும் படவில்லையே! என்று எண்ண வேண்டுவது இல்லை! கட்டாயம், அவர்தம் தொழில் தேர்ச்சியும், வெற்றியும் அரசு மதித்துப் பாராட்டும், நிலைமையை ஒருநாள் அடைந்தே தீரும். அவரே அவரை உணர்த்திப் பெறவேண்டும் நிலை ல்லாமல், அவரை உணர்த்தத்தக்க சூழல் உண்டாகவே செய்யும். அப்பொழுது அதுகாறும் பெறாத பேறுகளை யெல்லாம் பெற்றே தீர்வார் என உறுதிமொழிகின்றார் திருவள்ளுவர்.

“வீறெய்தி மாண்டார் வினைத்திட்டம் வேந்தன்கண் ஊறெய்தி உள்ளப் படும்”

என்பது அது (665)

இந்தக் குழந்தையை ஒரு புட்டியில் போட்டுவிடலாம். இதற்குத் தொட்டிலோ கட்டிலோ வேண்டியதில்லை என்று மகப்பேறு பார்த்த மருத்துவி எள்ளலாகச் சொல்ல ஒல்லி (ஒல்கி) யாகப் பிறந்தவர் ஐசக்குநியூட்டனார். அவர்தம் அறிவுக் கூர்ப்பு என்ன குறைந்தோ போய்விட்டது. அவ்வாறே வினைத் திட்பத்திலும் வல்லார் உருவத்தில் பரியராக இருக்க வேண்டும்

-