உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

> தரக்கட்டுப்பாடும் திருக்குறளும் ஓ

321

என்பது இல்லை. கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பது பழமொழி. இலால்பகதூர் சாத்திரியார் உள்ளத்தில் கிடந்த உறுதிப்பாடு என்ன குறைவானதா?

ஒரு பெரிய தேர்: அதற்கு ஏற்ற பெரிய கால் (சக்கரம்) இருந்தால் போதுமா? அச்சு இருந்தால் மட்டும் போதுமா? அச்சு கழன்றோடாமல் இருக்க அச்சாணி வேண்டுமே! அவ்வச்சாணி என்ன தேர்போலவோ, கால்போலவோ, அச்சுப் போலவோ பெரியதா? எவ்வளவு சிறியது. 'அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது' என்பது பழமொழி ஆயிற்றே. அதனால்,

“உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து"

""

என்கிறது வினைத் திட்பக்குறள் (667)

உறுதிப்பாடாக ஒரு செயலைத் தேர்ந்தெடுத்தல், அதனைத் துணிவாகச் செய்தல், இடைப் படாதும் காலம் நீட்டாதும் முடித்தல் என்னும் முத்திறமும் வினைத்திட்பத்திற்கு உரியவை என்கிறார் திருவள்ளுவர். அது,

66

“கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கங் கடிந்து செயல்”

-

என்பது (668). கலங்காமை உறுதி; துளங்காமை தூக்கம் - சோர்வு, கால நீட்டிப்பு.

துணிவு;

கட்டாயம் இன்பமேயன்றித் துன்பமே தராத செயல் ஒன்று; அதனைச் செய்ய முயல்கின்றோம்; முயலும் போது அடுத்தும் தொடுத்தும் சிறுசிறு துயர்கள் உண்டாகின்றன. ஆயினும் என்ன? முடிவுற்றால் இன்பமே அல்லவோ! அம் முடிவையே குறிக்கோளாகக் கொண்டு, ஏற்படும் துன்பங்களை மிதிகல்லாகக் கொண்டு மேடேறிவிடுக என்கிறார்.

66

“துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை”

என்பது அது

வினை செயல்வகை :

(668)

ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழி முறைகளைப் பற்றிக் கூறுவதே வினைசெயல்வகை என்பதாம். இதில் முதல் எட்டுக்