உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322

இளங்குமரனார் தமிழ்வளம் - 40 40 ஓ

குறள்கள் எத்தொழிலையும் நிறைவேற்றும் பொதுக் கருத்தை உரைப்பவாம். இறுதிய குறள்கள் இரண்டும் ஆட்சியர்க்கு உரியவையாம்.

ஒரு செயலைச் செய்ய ஆராய்தல், ஆராய்ந்து இதனை இவ்வாறு இவரால் செய்தல் எனமுடிவு எடுத்தல், அம்முடிவே முடிவாய்த் துணிந்து நிறைவேற்றி விடுதல் ஆகியவை வேண்டும். அவ்வாறு அன்றி அம்முடிவைச் சோர விடுதல் நன்மையாகாத துடன் தீமையையும் தரும்.

"சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது”

சூழ்ச்சி என்பது வஞ்சகப் பொருளில் வருதலே இந்நாள் பெரு வழக்காவது. ஆனால், ஆராய்தல் என்னும் நற்பொருளில் இவண் வருகின்றதாம்.

சில செயல்களை விரைந்து செய்தல் வேண்டும்; சில செயல்களைக் காலந் தாழ்த்திச் செய்தல் வேண்டும். அவற்றை மாற்றி, விரைந்து செய்ய வேண்டுவதைக் கால ாலந்தாழ்த்திச் செய்தலும், காலந்தாழ்த்திச் செய்ய வேண்டியதை விரைந்து செய்தலும் ஆகிய இரண்டுமே தீமையாம்.

கன்மா (Cement)க் கொண்டு பணிசெய்கின்றோம். அதனைக் கலந்த கலவை ஈரம் புலருமுன் பயன்படுத்தி விட வேண்டும். அதனைக் காலம் தாழ்த்திக் கெட்டிப்பட விட்டுவிடின் கல்லாகிப் பயன்படாது ஒழியும். ஆனால், சுண்ணாம்பைக் குழைத்து அப்படியே பயன்படுத்துவதினும் அதனை அடைந்து வைத்து, மீளவும் குழைத்து அடைந்து பயன்படுத்தின் கெட்டித்தன்மை மிகும்.

மழை வரும் போல் உள்ளது! களத்தில் தவசம் கிடக்கின்றது! விரைந்து மூடிவிட அல்லது அள்ளிவிட வேண்டும்! ஆனால் நனைந்து விடின், ஈரம் பதமெல்லாம் அறவேபோக ஆலாற்றல் கட்டாயம் வேண்டும். அரை குறைக் காய்வுடன் களஞ்சியத்தில் சேர்த்துவிட்டால் மடித்துப் பூசுணம் பூத்துக் கெட்டோழியும்.

கோழி முட்டையை அடையில் வைக்கவும் நாள்களைக் கண்டனர். அதற்கு வேண்டும் வெப்ப அளவைக் கணக்கிட்டு ஒரே நாளில் பொறிக்கச் செய்யும் பொறித்திறமும் வந்து விட்டது. எனினும் அதற்கு வேண்டும் வெப்ப அளவு வேண்டியே உள்ளதாம்.