உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரக்கட்டுப்பாடும் திருக்குறளும்

323

கட்டிய கட்டுப் பிரிக்கக் காலமுண்டு; அதனை மருத்துவர்

வலியுறுத்துகிறார்.

கட்டடத்தை ஒட்டியபின் முட்டுப் பிரிக்க இவ்வளவு நாள் வேண்டும் எனக் கட்டடத் தேர்ச்சியர் உரைக்கிறார்.

இத்தகையவை,

“தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க

தூங்காது செய்யும் வினை”

(672)

என்னும் குறள் விளக்கமாம், தூங்குதல் என்பதற்கு உறங்குதல் என்பது இந்நாள் பொருள். அந்நாள் பொருள் 'காலந் தாழ்த்துதல்' என்பதாம். தூங்காமை விரைவாகச் செய்தலையும், தூங்குதல் மெதுவாகச் செய்தலையும் குறிப்பன.

பொருந்திய செயல்களையெல்லாம் பொருந்தும் வகையால் செய்வது நல்லதுதான். ஆனால் பலவற்றைத் தேர்ந்து, ஒன்றையும் சீராக முடிக்கமுடியாமல் தொடங்கி வைத்து ஆவது என்ன? பலமரம் கண்ட தச்சன் ஒருமரமும் வெட்டான் என்பது போலல்லவோ ஆகும்? இக்கரைக்கு அக்கரை பச்சை என ஓடித்திரியும் ஆட்டுச் செயல்போல அல்லவோ ஆகும். அப்படிச் செயலாற்ற அலைவார் முற்ற முடியாமல், 'எல்லாம் இழப்பு எங்கும் இழப்பு' என்றே திரிவர். ஆதலால், அத்தகையவர் தமக்கு வெற்றியைக் கட்டாயம் தருவது இது என்று துணிந்த ஒரு செயலிலேயே ஊன்றி நின்று உழைத்து வெற்றி காண வேண்டும்.

ஒருசிலர் ஒன்பது என்ன, தொண்ணூறு தொழில்களைத் தொய்வு இல்லாமல் நடத்துகின்றனரே, எனக்கு மட்டும் முடியாதா? என்று வினாவுவார் உண்டு. இவர்க்கு அத்திறம் இருப்பின் வினாவிக் கொண்டு இரார். இதற்குப் பொழுதே இல்லாவாறு கடிய முயற்சியிலும் திறத்திலும் தலைப் பட்டிருப்பார். ஆதலால்,

66

'ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே; ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல்”

என்கிறது வினை செயல் வகைக் குறள் (673)

எடுத்த செயலை அரைகுறை இன்றி முடித்துவிட வேண்டும் என்பதை வினைத்திட்பத்திலேயே (663) உரைத்தார். அதனை ஓர் எடுத்துக் காட்டால் நிறுவிக் காட்டுகிறார், இவ் வினைசெயல் வகைக் குறளிலே.