உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324

அது,

இளங்குமரனார் தமிழ்வளம்

-

40

66

“வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும்”

என்பது.

அணையாத

அணைத்தும் அணையாத நிலையில் தீக்கங்குடன் சாம்பலை அள்ளிக் குப்பையில் கொட்டிவிடுவார் உண்டு! அடுப்பிலே அணையா நிலையில் கிடக்க விடுவாரும் உண்டு! தீப்பற்றி எரிய அதனை அணைத்த பின்னரும் காற்றில் கனல் கசிந்து வளர்தல் உண்டு! இவையெல்லாம் அணைக்காமல் விடப்பட்ட அரைகுறைத் தீயாய்ப் பின்னே 'சிறுபொறி பெருந்தீ’ என்பதுபோல் ஊரையும் நகரையும் அங்காடிகளையும் தொழிலகங்களையும் முற்றாக அழித்து விடுதல் நாளும் நாம் காணக் கூடியவைதாமே!

எளிதாக இருக்கும் மின்கசிவு, என்னென்ன விளைவுகளை உண்டாக்கி விடுகின்றது!

புகைக்குப் பற்ற வைத்த நெருப்பு புகைக் காடாக்கி அழிவு செய்வது இல்லையா?

தீயை அரைகுறையாக அணையாமல் விடுவது எவ்வளவு தீமையோ அவ்வளவு தீமையானது எடுத்த செயலை முற்ற முடியாது இடையில் விட்டுவிடுவது என்கிறார். இதனை நன்கு எண்ணிச் செயலாற்றுதல் கட்டாயம் வேண்டும் என்பாராய், 'நினையுங்கால்' என்றும் நெஞ்சறியக் கூறுகிறார் வள்ளுவர். செயலோடு பகையையும் இணைத்துச் சொன்னார். அது அரசுக்கு உரியது என்று ஒதுக்க வேண்டுவது இல்லை! நமக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்கதேயாம்.

நமக்குப் பகையாய் நாமே இருப்பது இல்லையா? நம் எண்ணமே இருப்பது இல்லையா? நம் செயல்கள் பழக்க வழக்கங்கள் இருப்பன இல்லையா? நம் நோக்குகளும் போக்குகளும் அமைவன இல்லையா? இவற்றுள் தகாதவை எவையென நாம் கண்டு கொள்கிறோமோ அவற்றை அக்கண்ட அளவிலேயே அதற்கு மேல் வளர விடாமல் அழித்தும் ஒழித்தும் விட்டால் எவ்வளவு நலப்பாடாம். முட்செடி விளைநிலத்தில் இருந்தால் உழவன் விட்டு வைப்பானா? வெட்டி அழிப்பான் அல்லவா? வேரும் தூரும் இல்லாமல் அல்லவோ அழிப்பான். அப்படி முற்றாக ஒழித்தல் ஆக்கமாம் (879). ஆதலால்,