உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரக்கட்டுப்பாடும் திருக்குறளும்

“வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் நீயெச்சம் போலத் தெறும்"

325

என்கிறார் (674) எச்சம் - அரைகுறையாய் எஞ்ச விடுவது; தீ எச்சம் - தீயை முழுதாக அணையாமல் எஞ்ச விடுவது; தெறும்- அழிக்கும்.

எவ்வினையைச் செய்ய வேண்டுமோ அவ்வினையை எண்ணிச் செய்ய வேண்டும் என்றும், அதனையும் உறுதியாய் எண்ணிச் செய்ய வேண்டும் என்றும் கூறிய திருவள்ளுவர் எவ்வெவற்றை எண்ண வேண்டும் என்றும் பட்டியலிட்டுக் காட்டுகிறார். அவை பொருள், கருவி, காலம், வினை, இடன் என்றும், முடிவு, இடையூறு, நிறைவில் உண்டாம் பயன் என்றும்

எட்டாம்.

தொழிலுக்கு வேண்டும் பொருள் இருவகையாம். அவை முதலீடு என்னும் பொருள் ஒன்று; மற்றொன்று தொழிலுக்கு வேண்டும் மூலப் பொருள். அரிசி ஆலை, செங்கல் ஆலை, எண்ணெய் ஆலை, பருத்தி ஆலை, நிலக்கரி ஆலை என அமைப்பார் அவற்றுக்கு வேண்டும் முதலீட்டுத் திட்டப் பொருள் இல்லாமல் எப்படிச் செய்வர்? அவ்வத்தொழில் பெருக்க சுருக்கம் பின்விரிவு இவற்றையெல்லாம் எண்ணிய முதலீடுவேண்டுமே! மேலும் தொழிலுக்குரிய மூலப் பொருள்கள் கிடைக்கும் இடத்திலும் கொண்டு வந்து சேர்க்கும் வாய்ப்பிலும் இருந்தால் தானே காலச் சுருக்கமும், பொருட்செலவுச் சுருக்கமும் வாய்க்கும்.

தொழிலுக்கு வேண்டும் கருவிகள் உருவாகும் இடம், பெறும் வகை, அவற்றைப் பொருத்தும் வகை, இயக்கவாய்ப்பு, இயக்கத் திறம், இயக்கும் தொழிலாளர் என்பன வெல்லாம் கருதிப்பார்த்துத்தானே தொழில் தொடங்க வேண்டும்.

எல்லாப் பொருள்களும் எல்லாக் காலத்தும் கிட்டா. "பருவத்தால் அன்றிப் பழா" என்பத தெரிந்த உண்மை. குறிப்பிட்ட ஒரு காலத்தில் கிடைக்கும் மூலப் பொருளைக் கொண்ட இயக்கப்படும் தொழிற்சாலை, காலமெல்லாம் இயக்குவதற்குத் தக்க வகையில் மூலப் பொருள் சேமிப்புக்கும், உருவாக்கப் பொருள் சேமிப்புக்கும் தக்க வாய்ப்புகளைக் கொண்டிருத்தல் வேண்டும் அல்லவோ!

உருவாக்கம் முடிந்த அளவில் தொழில் நிறைவேறி விடாதே அதனை விலையாக்க வேண்டும்; அதற்குரிய வழி