உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

துறைகளையும் முடிக்க வேண்டுமே; அதற்கும் எத்தனையோ போட்டிகள் குறுக்கீடுகள் இயற்கைத் தடைகள் உண்டே!

வற்றையெல்லாம் வென்று, கண்டுமுதல் காணும் போதல்லவோ தொழிற்பயன் கிட்டும். அக் கண்டு முதலும் கடைசிப் பொழுதில் ஏமாற்றத்திற்கு உட்பட்டதாகவோ காலத்தால் கைக்கு வாராததாகவோ அமைந்துவிட்டால் என்னாவது? வள்ளுவப் பார்வை விரிவுமிக்கதே!

"பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல்”

"முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்

படுபயனும் பார்த்துச் செயல்”

(675)

(676)

ஒரே தொழில் ஒத்த வாய்ப்புக் கொண்டிருந்தாலும் அத்தொழிலில் தேர்ச்சியும் நுணுக்கத் திறமும் வாய்ந்தவன் அதனை இயக்குதற்கும், அவற்றை இல்லாதவன் இயக்குதற்கும்; அத்தொழில் நுணுக்கங்கங்களெல்லாம் கரைகண்டவன் தலைவனாக இருந்து நடத்துவதற்கும் எவ்வளவு வேறுபாடு? ஒருவன் வெற்றிக் கனியைக் குவித்துக் கொண்டிருக்க மற்றொருவன் தோல்விக்குமேல் தோல்வியாய் அடிபடுவதென்ன? இதனால்,

“செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல்”

வேண்டும் என்கிறார் திருவள்ளுவர் (677)

செய்யும் தொழில் தேர்ச்சி, செய்வானை அறிந்த திறம், செய்யும் செயல்முறைத் தெளிவு ஆகியவற்றின் நுணுக்கங்களை யெல்லாம் உட்புகுந்து அறியவல்லான் தேர்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும். அவ்வாறு கொண்டால், படைத் தலைவன் திறமையால் படையே சிறப்புப் பெறுவது போல் (768), அத்தொழில் தேர்ச்சியாளனால் அத்தொழிலே பெருமித நடையிடும்.

வினைசெயல் வகையில் எடுத்த வினையால் அதனை மட்டுமன்றி, அடுத்தடுத்த வினைகளையும் முடித்தலைப் பற்றியும் நினைவூட்டுகிறார்.

பஞ்சுவணிகம், நூலாலை, துணியாலை, துணி ஏற்றுமதி இறக்குமதி, துணிவிற்பனை நிலையம் எனக் கொண்டதொழில், சார்புத் தொழில்களைக் கொள்ளுதல் வேண்டும் என்கிறார்.