உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரக்கட்டுப்பாடும் திருக்குறளும் ஓ

327

தென்னந் தோப்பு உடையார், கீற்று உருவாக்கம், கயிற்று வேலை, தேங்காய்க் கடை, எண்ணெய் ஆலை இன்னவற்றை மேற்கொள்ளல் தகும்தானே!

நெய்வேலி நிலக்கரித்திட்டம் என்பது நிலக்கரி அகழ்ந்

தெடுக்கும் அளவிலேயோ நின்றுவிட்டது?

அகழ்தல், கரித்தூய்மை, பொடியாக்கம், கரிக்கட்டியாக்கம், மின்னாக்கம் என எத்தனை எத்தனை விரிவுடையதாய் இயல் கின்றது. இதன் ஒருபகுதிதானே தரமேம்பாட்டுக் குழும்பின் பணி. ஆதலால்,

“வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று"

என்கிறார் திருவள்ளுவர் (678).

பழக்கப்படுத்திய யானையைக் கொண்டு பழக்கப்படாத யானையைப் பற்றிக் கொள்வதுபோல், எடுத்த தொழிலைக் கொண்டே அடுத்தடுத்த தொழிலை நிறைவேற்றலை உவமையால் விளக்குகிறார்.

ஆள்வினையுடைமை :

ஒவ்வோர் ஆளும் செயலாற்றுபவராக இருக்க வேண்டும்; சோம்பராக இருத்தல் ஆகாது என்பதை விளக்கும் சொல் 'ஆள்வினை' என்பதாகும். வினை செய்யா ஆள், ஆள் அல்லர் என்பதே அச்சொல்லைக் கண்டவர் சொல்லிய குறிப்பாகும். அள்வினை என்பதன் பொருள் முயற்சி. முயற்சியுடையவராக இருப்பதே ஆள்வினையுடைமையாகும்.

எடுத்த எடுப்பிலேயே அழுத்தமாகச் சொல்கிறார். இச்செயல் நாம் செய்தற்கு இயலாதது என்று எண்ணாதே; முயற்சி செய்; பெருமுயற்சி செய்; வெற்றிப் பெருமையை அம்முயற்சி தந்தே ஆகும் என்கிறார்.

66

'அருமை யுடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்"

(611)

என்பது அது அசாவாமை - சோர்வோ தளர்ச்சியோ அடையாமை. இதனையே வலியுறுத்துவார் போல்,

"முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்"