உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328

இளங்குமரனார் தமிழ்வளம் – 40

என்றும் கூறுகிறார்

(616).

ஒருசெயலில் இறங்கியபின் இச்செயலில் துன்பம் வருதலே ஆகாது என்று எண்ணாதே; துன்பம் வரத்தான் செய்யும்; அதனைப் பொருட்டாக எண்ணாமல், எடுத்த செயலை முடித்தலையே உறுதிப் பிடியாகச் செய். அந்நிலையில் துன்பம் தொலைவில் ஓடிவிடும்; இன்பம் ஓடிவந்து சேரும்; தனக்கு வந்த துன்பத்தையன்றித் தன்னைச் சார்ந்தவர் துன்பத்தையும் ஒழிக்கின்ற வலிய தூணைப் போலவே நீ இருப்பாய் என்கிறார். இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்

துன்பம் துடைத்தூன்றும் தூண்

(615)

ஒரு செயலை அல்லது தொழிலைத் தொடங்கி அச்செயலை அல்லது தொழிலைக் கெடுக்கத் தக்கதைச் செய்யாதே! எடுத்த செயலை அல்லது தொழிலைக் குறைவில்லாமல் முடித்து வெற்றி நடையிட்டவர்கள் முயற்சியிலேதான் உலகத்தின் வாழ்வும் உயர்வும் தங்கிக் கிடக்கின்றது.

“வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு'

99

(612)

மாந்தப் பிறப்படைந்த எனக்கு வேண்டும், கண் காது, வாய், கை, கால் முதலிய பொறிகள் (உறுப்புகள்) செவ்வையாக அமையவில்லையே! குறையுடையனவாக உள்ளனவே! என்ன செய்வேன்! இக்குறையை என்குறையாக எண்ணிப் பழிப்பார் கூட உள்ளனரே! என்னால் பிறரைப் போல் முயற்சி மிக்கோனாக எப்படி விளங்க முடியும் என்று எண்ணாதே. உன்னைப் போன்ற உடற்குறையும். அதற்கும் மிக்க உடற்குறையும் உடையவராக எத்தனையோ பேர்கள் இதற்குமுன் உலகில் பிறக்கவில்லையா? இப்பொழுதும் பிறந்து இருக்கவில்லையா- அவர்களுள் எத்தனை எத்தனை பேர்கள், எல்லாப் பொறிகளும் செம்மையாக அமைந்தவர்களும் செய்ய முடியாத செயல் களையும் செய்து, செயற்கரிய செய்த பெருமக்களாக விளங்கி யுள்ளனர் என்பதை எண்ணிப் பார். பொறிக்குறையைப் பொருட்டாக எண்ணாமல் துணிந்து கடனாற்று; வெற்றி உன் கைகளிலே குவியும்; கையில்லையே என் செய்வேன் என்கிறாயா? உன் காலடியிலே குவியும்! காண முடியாதே என்கிறாயா? காது கமழக் கமழக் கேட்க முடியுமே! கண்ணும் காதும் வாயும் ஆகிய முப்பொறியும் கெட்ட கெலன் கெல்லரால் உலகப்புகழ் அடைய வாய்த்த போது, அதனை உன்னாலும் அடைய முடியும் என்று உறுதிகொள். அடைந்தே தீருவாய் என்கிறாய்.