உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரக்கட்டுப்பாடும் திருக்குறளும்

“பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி”

(618)

329

பொறிக்குறையைக் கூட வென்றுவிடுவேன். ஆனால், என் பணிக்கு மழை பெய்தல், மழைபெய்யாமை, கடுங்காற்று, கடுவெப்பம், கொடும்பனி, இடிமின்னல், நில அதிர்வு, புயல் கடல் கொந்தளிப்பு இப்படியெல்ாம் தடைகள் இயற்கையால் நிகழ்கின்றனவே என் செய்வேன் என்று ஏங்குகிறாயா? ஏங்கும் உன்னைக் கண்டு இரங்குதலாக, அன்பா, முன்னெல்லாம் இவ்வியற்கைத் தடைகள் இல்லாமல் இருந்து நீ பிறந்தபின் இவையெல்லாம் ஏற்படுகின்றனவா? இவையெல்லாம் முன்னரும் உள்ளவை தாமே! பின்னரும் இருக்கப் போவவைதாமே! இவற்றையெல்லாமும் கூட முனைந்து நின்று வெற்றி கண்டு எடுத்த செயலை இனிது முடித்தவர் இல்லையா? அவர்கள் ஒட்டு மொத்த வரலாறுகளும், துணிவுகளும், வெற்றிகளும் ஓயாமல் உரைப்பது என்ன?

“ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்"

(620)

தான்

என்பது தானே! (உப்பக்கம்-புறமுதுகு; உஞற்றுதல்-செய்தல்) என்கிறார்.

உழவு:

இனி உழவு என்பது தனியே அத்தொழிலை எடுத்துக் கூறும் அதிகாரமும். அத்தொழிலைக் கூறுங்கால், பிற தொழில்களுக்கும் வேண்டும் அடிப்படை இயல்புகளையும் அமைத்தே கூறுகிறார்.

குடி செயல்வகை என்னும் அதிகாரத்தை அடுத்துள்ளது உழவாகும். குடும்பம் நன்னிலை எய்துதற்கு இன்றியமையாது வேண்டுவது தொழிலாக்கம் என்பதைக் குறிக்கும் குறிப்பினது அது. அதனை அடுத்துள்ள அதிகாரம் 'நல்குரவு' என்பது. அத்தொழிலைச் சீராகச் செய்யாது ஒழிந்த குடி வறுமையில் தத்தளிக்க வேண்டியே நேரும் என்பதைக் குறிப்பது அது.

"உழவை நம்பியே உலகம் உள்ளது. ஆதலால் அவ்வுழு தொழிலில் எவ்வளவு அல்லல் உண்டாயினும் அத்தொழிலே உலகத்தொழில்களுள் தலைமையான தொழிலாகும்." (1031)