உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330

இளங்குமரனார் தமிழ்வளம் - 40 ஓ

"உலகம் எனப்படும் தேர்க்கு அச்சாணி போன்றவர் இவர் என்று சொல்லவேண்டுமானால், அவர் உழவரே யாவர். அவரே உலகத்தவரை எல்லாம் தாங்கு பவராவர்." (1032)

"உழவர்கள் தம் தொழிலைச் செய்யாமல் முடங்கி விட்டால், ‘எங்களுக்குப் பற்றே இல்லை' என்னும் துறவியரால் கூட உலகில் வாழ இயலாது" (1036)

"உழவர்தாம் எவரிடமும் போய் 'எமக்கு இது இல்லை' என்று கேட்காதவர். அவரிடம் எவரேனும் வந்து இது ல்லை என்றால் 'இல்லை' என்று சொல்லாமல் ஈபவர்." (1035)

அரசு குடைபிடிப்பதால் நாட்டில் நிழல் (அமைதி) உண்டாவது இல்லை. உழவர் தொழில் புரிவதால் தான் அமைதி உண்டாகின்றது" (1034)

என்று உழவின் சிறப்பைக் குறிப்பிடுகிறார்.

"நிலம் காயக் காய உழவேண்டும்; ஈரப்பதன் அறவே இல்லாத வகையில் - நூறுகிராம் புழுதி 25 கிராம் எடையாகும் அளவில் உலர்ந்து போகும் வகையில்- உழவேண்டும்" (1037)

"அவ்வுழவினும், எருவிடுதலும் களையெடுத்தலும் நீர்விடுதலும் காவல் காத்தலும் ஒன்றற்குமேல் ஒன்று சிறப்பாகச் செய்தல் வேண்டும்" (1038)

"நன்செய் புன்செய் தோட்டம் தோப்பு ஆகியவற்றை நாளும் பொழுதும் தவறாமல் சென்று கண்காணித்தல் வேண்டும். 'நேற்றுச் சென்றோமே இன்றென்ன' என்றோ, அப்பொழுது சென்றோமே இப்பொழுது என்ன என்றோ, இருந்துவிட்டால் கேடாகும். கணவன் அன்பைப் பெறாத, இருந்துவிட்டால் கேடாகும். கணவன் அன்பைப் பெறாத அன்பு மனைவி முகமும் அகமும் வாடிவிடுவது போல, அந்நிலங்களும் வெறுப்புற்று வாட்டமுறும்". (1039)

"நிலக்கிழவன் ஒருவன் என் பிழைப்புக்கு வகை எதுவும் இல்லையே என்று சோர்ந்து கிடப்பானானால், அந்நிலமே அவனைப் பார்த்து, உனக்கு என்ன என்ன வேண்டுமோ அவ்வளவும் தடையில்லாமல் தருவதற்கு நான் இருந்தும் நீ உழைத்து எடுத்துக் கொள்ள