உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. திருக்குறளில் தொழில் தரம்

தொழில் வாழ்வில் தரம் இன்றியமையாதது ஆகும். “சரக்கு முறுக்கா சரக்காளர் முறுக்கா" என்னும் பழமொழியே தொழில் வாழ்வில் தரம் வேண்டும் என்பதை எளிதில் புலப் படுத்திவிடும்.

"நல்லமாடு உள்ளூரில் விலைபோகும்" என்பதொரு பழமொழி.

'நல்ல பொருளுக்கு விளம்பரம் வேண்டியதில்லை. அப்பொருள் தரமே அதற்கு விளம்பரம்" என்பதும் நாடறி செய்தியே.

இதனால், விளம்பரம் வேண்டா என்பது கருத்தன்று. என்று விளம்பரம் செய்தாலும், தரமில்லாப் பொருள், தரமுள்ளதாகச் சொல்லிச் சொல்லி ஏமாற்றப் பட்டாலும், எல்லாரும் எந்நாளும் ஏமாற மாட்டார். ஆதலால், 'தரமே' ‘நிரந்தரம் ஆகும் என்பதாம்.

"இனித் 'தரம்' என்பதுதான் என்ன?” எனப் பார்ப்போம். "எது எந்தத் தகுதியில் இருக்க வேண்டுமோ அது, அந்தத் தகுதியில் இருக்குமாறு செய்யப்படுவதே தரம்" ஆகும்.

தகுதி குறைந்தது தரம் குறைந்ததே!

அதனால்தான் தரம், உயர்தரம், மேல்தரம் ஓங்குதரம், மீத்தரம், மேனி, வாசி எனவும், தாழ்தரம், கீழ்த்தரம், குறைதரம் எனவும், தரமேம்பாடு, தர உயர்வு, தரக்கேடு, தரக்குறை எனவும் பலப்பல படி நிலைகளில் மக்கள் வழக்கில் உள்ளனவாம்.

'தரம்' என்னும் ‘தகுதி’ நடுவு நிலைமை என்னும் பொருளது அதற்குச் 'செப்பம்' என்பதொரு பெயரும் உண்டு. நடுவுநிலை எண்ணமும், செப்பச் செயன்முறையும் அமைந்த ஒன்று தரமுடையதாக இருக்கும் என்பதில் ஐயமே இல்லையாம்.

தகுதி இன்னதெனக் கூறும் வள்ளுவர்,