உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரக்கட்டுப்பாடும் திருக்குறளும்

“தகுதி எனஒன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின்”

333

என்கிறார் (111). "தகுதி எனப்படும் ஒன்று எப்பொழுது நல்லதாக இருக்கும் என்றால், அதன் பகுதிகள் அனைத்தும் உரிய உரிய வகையில் அமைந்து போற்றற்குரியதாக விளங்கும் நிலையில்” என விளக்குகிறார். ஒன்றன் தரம் அதன் ஒவ்வொரு பகுதிக் கண்ணும் உள்ளது என்பது இதனால் விளங்கும்.

"இச்சிறிய பகுதிதானே குறையுடையது; இருந்தால் இருந்து விட்டுப் போகின்றது; இதனால் கெட்டுப்போவது என்ன; இக்குறையைக் கண்டு கொள்ளவா போகின்றனர்" என்றெல்லாம் எண்ணிப் பொருள்தரம் குறையச் செய்வது தக்கோர் செயலாகாது.

'செய்நேர்த்தி' என்பது ஒருதனித்தன்மை. சமையல் தொழிலிலோ 'செய்நேர்த்தி' எவ்வளவு பாராட்டுக்கும் பயன் பாட்டுக்கும் உரியதாக விருந்துகளில் சிறப்புறுகின்றது! அந்நேர்த்தியில்லாமையால் உணவை வண்டி வண்டியாகக் குப்பையென அள்ளிப் போடுதல் நாம் காணாததா?

வாங்கிய பொருட் குறையா அது! வாங்கிய பொருளை ஆக்கும் செய்நேர்த்திக் குறைதானே, முழுக்குறை ஆகிவிட்டது! உருளைக் கிழங்கையும் நாவில் வைக்க இயலாமல் செய்வார் இலரா?

கருணைக் கிழங்கையும் 'வேண்டும் வேண்டும்' என்று விரும்பிக் கேட்டு உண்ணச் செய்வார் இலரா?

ஆதலால், செய்வார் செய்நேர்த்தியே செய்பொருள் நேர்த்தியாய் வாங்குவார் நெஞ்ச நிறைவாய்ச் சிறப்படை கின்றதாம்.

தரம் என்பது கவர்ச்சியன்று; அதனால், கவர்ச்சி இல்லாமையும் அன்று. அதற்குரிய அளவால் கவர்ச்சி வேண்டுவதே! போலிக் கவர்ச்சி பொழுதில் மாறும் கவர்ச்சி, ஏமாற்றும் கவர்ச்சி தரமான பொருளுக்கு வேண்டுவது இல்லை.

தரமான பொருள் 'உரம்' என்னும் வலுவுடையதாக இருக்க வேண்டும். அதன் விலைத்தரத்திற்கு ஏற்ற உழைப்புத் தரமும் பயன்பாட்டுத் தரமும் உடையதாக இருக்க வேண்டும்.