உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334

தான்

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

இதன் தரம் இத்தகையது என்று சொல்லாமல் அப்பொருளே தரமுடையது என்பதைத்தானே

தகுதியதாய் அமைதல் வேண்டும்.

சொல்லவல்ல

தரம் அமைவதோடு அதன் விலையீடும் தக்கதே என்னும் அளவில் இருத்தல் வேண்டும்.

உருவாக்குவார், “தாமே தமக்கு முழுநிறைவுடன் வாங்கிக் கொள்ளத் தக்கதே இவ்வுருவாக்கம்” என்னும் நிறைவை உண்டாக்கி விட்டால், அப்பொருளின் தரம் தக்கதே என்பது உறுதியாம். இதனால்தான்,

“வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்”

என நடுவு நிலைமை நிறைவாகக் குறித்தார் வள்ளுவர்.

(120)

தம்பொருள் வேறு பிறர்பொருள் வேறு என்றோ, தாம் கொள்ளும் பொருள்வேறு கொடுக்கும் பொருள் வேறு என்றோ மதிப்பு வேறுபாடு காட்டாமல் ஒப்ப மதித்து வாணிகம் செய்தலே பொருள் வாணிகமாவதுடன் அறவாணிகமும் ஆம் என்பது இதன் பொருளாகும். இதனைக் "கொள்வதூஉம் மிகை கொளாது, கொடுப்பதூஉம் குறைபடாது, பல்பண்டம் பகர்ந்து வீசும், தொல்கொண்டித் துவன்றிருக்கை" என்று பட்டினப் பாலை பாடும்.

இவ்வுணர்வு ஒருவர்க்கு வந்துவிட்டால் உருவாக்கத் தரத்திலோ, பொருள் தரத்திலோ குறை நிகழ்வதற்கு வாய்ப்பு இல்லை.

கண்ணில் காட்டுவது ஒரு பொருளாகவும், கட்டிவைப்பது ஒரு பொருளாகவும் அங்கு மாறா.

அழகுப் பொருளைக் கையில்தந்து அழுகல் பொருளைப் பையில் போடுதல் ஏற்படாது.

தரமான பொருளன்றித் தரங்குறைந்த பொருளை ஆங்குத் தாரார் என்னும் உறுதி, வாங்கும் வாடிக்கையாளர்க்கு உண்டாகி விட்டால், எவராலும் அவர் வாடிக்கையைத் தடுத்து விடமுடியாத உறுதியைத் தந்துவிடும்.

ஒரே ஒரு முறை தரங்குறைந்த பொருளைத் தலையில் கட்டிவிட்டால் போதும், அது அவர் வாடிக்கையைக் கெடுப்பதுடன் நாலுபேர் வாடிக்கை கெடவும் துணையாகும்.