உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரக்கட்டுப்பாடும் திருக்குறளும் ஓ “பொய்யிற்கும் ஏமாற்றுக்கும் என்ன தண்டனை?”

66

என்றார் ஒருவர்.

'அவரை எவரும் நம்பார்; அதுவே தண்டனை”

என்றார் மற்றொருவர்.

335

ஆதலால், தரத்தைக் காப்பாற்ற நினைவார் இது முதல் தரம் அன்று, 'இரண்டாம் தரம்' என்று முத்திரை குத்தி அல்லது அடையாளம் செய்து தள்ளுபடி விலையில் விற்கின்றனர்.

'இது முதல் தரம்' 'இது இரண்டாம் தரம்' 'இது மூன்றாந்தரம்' என ஒரே பொருளைத் தரம் பிரித்துத் தனித்தனி விலையில் விற்கின்றனர். இதில் தரத்தைப் பற்றிய ஏமாற்று இல்லாமையால் குறையுடையது ஆகாதாம்.

திருக்குறள் பொருட்பாலில் பொருள் செயல் வகை என்பதோர் அதிகாரம் (76). அது, பொருள்தேடல், பொருள் சேர்த்தல், பொருள் ஈட்டல் என்பதாக இல்லாமல் 'பொருள் செயல் வகை' என்று அமைந்திருப்பது சிந்திக்கத் தக்கதாம். அதே அதிகாரக் குறள் ஒன்று “செய்க பொருளை” என்றே ஏவுகின்றது (9). இன்னொரு குறள் “ஒண்பொருள் காழ்ப்ப இயற்றல்" என்கிறது(10). இவற்றால் வள்ளுவர் கொண்ட பொருளாக்கக் கருத்து வெளிப்பட விளங்கும். "செய்க பொருளை” என்பதன் வழியில் தலைநிற்கும் சப்பானிய நாடு உலக வல்லரசுகளையும் உரசிப் பார்க்கும் உயர்வில் நிற்றலும் உலகறி செய்தியேயாம்.

பொருளின் சிறப்பினைப் பலபட விரித்துக் கூறுகிறது இவ்வதிகாரம்.

“பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள்”

என்பது தலைநின்ற குறளாகும். பொருளின் தலைமை நிலையை து வெளிப்படுத்துவதும் ஆகும்.

"பொருள் என்பது அணையா விளக்கு” என்றும் அருமை யாகக் கூறுகிறார். ஆனால், இத்தகு அருமையும் பெருமையும் உடையது என்பதற்காக அப் பொருளை எப்படியும் தேடலாமா? கூடாது என்று தெளிவிக்கிறது திருக்குறள்.

"நாய் விற்று வந்த காசு குரைக்குமா?

வேப்பங்காய் விற்று வந்த காசு கசக்குமா?”