உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336

-

இளங்குமரனார் தமிழ்வளம் 40

என்பவை கேள்விப் பழமொழிகள். காசு குரைக்காது தான்! கசக்காது தான்! ஏமாற்றி வஞ்சஞ் செய்து வயிற்றில் அடித்துத் தேடிய காசு, தன் ‘பொன்' என்னும் பொருளை இழந்து, குற்றம் என்னும் பெயருக்கு உரியதேயாகிவிடும்.

செல்வம் சேர்த்தலை மட்டும் கூறாமல், சேர்க்கும் வழியும் நேர்வழியாக இருத்தல் வேண்டும் என்பது நேர்மைக்குறள் நெறி. ஆதலால்,

66

'அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள்"

என்றும்,

“அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல்”

என்றும் இப்பொருள் செயல் வகையிலேயே அறிவுறுத்தினார்

(4,5)

உழைப்புத்திறன், அறிவுத்திறன், ஆக்கத்திறன், மூலப் பொருள் திறன் ஆகிய பலதிறனும் அறிந்தும், வஞ்சம் கலப்பு ஏமாற்று போலி என்னும் பல தீமைகளுள் எதுவும் இல்லாதும் வந்த பொருளே அறமும் தரும் இன்பமும் தரும் என்பது முதற்பாட்டு.

இரண்டாம் பாடல் ‘பொருளாக்கம்' என்றே அமைகின்றது. அதுபொருள் உருவாக்கம், பொருள் சேர்த்தல் என்னும் இருவகைக்கும் இயைந்து பொருந்தும் இரட்டுறல் (சிலேடை) அணி நயத்தில் அமைந்ததாகும்.

ஒரு பொருளாக்கம் அருளொடு கூடியதாகவும் அன்பொடும் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். அவ்வாறு இல்லாப் பொருளாக்கத்தைத் தொடுதலும்-மனத்தால் எண்ணலும் கூட ஆகாது; தன்னை அது நெருங்காமல் தள்ளி விடுதல் வேண்டும் என்பது இரண்டாம் பாடற்பொருள்.

"பொருளாக்கம் பொருள்தேடும் கருவியே ஆயினும், எவ்வுயிர்க்கும் இரங்கும் அருளியலுக்கு ஒத்ததாகவும் இருத்தல் வேண்டும். தன் உற்றார் உறவு அன்பு நட்பு வாடிக்கை என்னும் அன்பியலுக்குத் தக்கதாகவும் இருக்க வேண்டும்" என எச்சரிக்கிறார். இது பொருளியல் கொள்கையே கொள்கை