உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரக்கட்டுப்பாடும் திருக்குறளும் ஓ

337

யானவர் கொள்ளும் கொள்கையன்றாம். ஆதலால், வள்ளுவர் வாழ்வியல் அறம் பொருள் சேர்த்தலோடு, அப்பொருளைச் சேர்க்கும். நேரிய முறையில் சேர்க்கவும் வழிகாட்டுவதாம்.

எந்தக் குமுகாயத்தால் பொருள் ஈட்டப்பட்டதோ அந்தக் குமுகாயத்திற்கு அப்பொருள் ஒப்புரவு வகையால் கிடைக்கச் செய்வதே 'நற்செல்வம்' எனப்படும். அது ஊருணி நீர்போலவும், பழமரம் போலவும், மருந்து மரம் போலவும் பொதநலப் பொருளாக விளங்கும் என்பார். அதற்கு மாறான செல்வம் 'நன்றியில் செல்வம்' என்பார். அப் பெயராலேயே ஓர் அதிகாரமும் வகுத்தார் (101). அவ்வதிகாரக் குறள் ஒன்றில் நல்வழியில் வாராச் செல்வத்தைக் 'களவில் போய் ஒழியும்' என்றே வருந்தியுரைக்கிறார்.

“அன்பொரீஇத் தற்செற்று அறம்நோக்காது ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர்”

என்பது அது (1009). அப்பொருள் அன்பற்றுத் தேடியது; உழைப்பவனும் துய்க்காது தன்னை அழித்துக் கொண்டு தேடியது; அறநெறி இது என்று எண்ணாதும் தேடியது; அப்பொருள் தேடியவனுக்கும் ஆகாமல் எவருக்கோ ஆகப்போகிறது என்று இரங்குகிறார். இங்கேயும் அன்பு அறம் ஆகிய வழி கடவாமல் தான் பொருளீட்டல் வேண்டும் என்று குறிப்பிடுவதை அறியலாம்.

நடுவு நிலை தவறாத உள்ளத்தனாக இருந்து அம்முறை மாறாத வகையிலே ஈட்டியவன் செல்வம் அவனுக்கே அன்றி அவன் வழிவழி வருவார்க்கும் அழியாப் பொருளாக இருந்து எவ்வெவ் வகைக்குப் பயன்பட வேண்டுமோ அவ்வவ் வகைக் கெல்லாம் பயன்படும் என நெறி காட்டுகிறார்.

“செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து” (112)

கெடுவழியால் வரும் பொருள் கூட நன்மை தருவதாக ஒருகால் தோன்றவும் கூடும். அப்படித் தோற்றம் தரினும் அது மெய்த் தோற்றம் ஆகாது. பிற்கேடு நேர்ந்தே தீரும். நன்மை என்று அது காட்டும் பொய்த் தோற்றத்திலே மயங்கி, அவ்வகையில் தேடுவதே வாழ்வாக்கிக் கொண்டால் 'பலநாள் திருடன் ஒருநாள் பிடிபடுவான்' என்பது போல் அகப்பட்டே தீர்வான். அப்பொழுது பழியும் இழிவும் ஆவதுடன் தேடியவை அழியவும்